ரவி சாஸ்திரி இதை மட்டும் சக்ஸஸ் பண்ணிட்டா அவரை கோச் பதவியிலிருந்து யாராலும் நீக்கமுடியாது – ரித்தீந்தர் பேட்டி

Reetinder
- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி அனைத்து வீரர்களையும் ஒன்றினைத்து சிறப்பாக அணியை வழி நடத்தி வந்தாலும் அவரது தலைமையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய கோப்பையை அதாவது ஐசிசி தொடரை இந்திய அணி வென்றது கிடையாது. இவரது பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் ஐ.சி.சி கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஒரு குறை ரவிசாஸ்திரி மீது இருக்கிறது.

Shastri

- Advertisement -

இந்நிலையில் ரவி சாஸ்திரி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரித்தீந்தர் சிங் சோதி கூறுகையில் : ரவிசாஸ்திரி மீது எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவருடைய வேலையை அவர் சரியாக செய்யவில்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அவர் எப்போதுமே தனது பணியை சரியாகத்தான் செய்து வருகிறார்.

ஆனால் முடிவில் எத்தனை கோப்பையை அவர் வென்றிருக்கிறார் என்றால் அதற்கு பதில் இல்லை என்ற ஒன்றுதான். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து யாரும் நீக்க முடியாது என அதிரடியான கருத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் :

Shastri

இத்தனை ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினாலும் அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை இது ஒன்றுதான் அவர் மீது இருக்கும் அழுத்தம் மேலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்த பின்னர் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தமும் தற்போது ரவிசாஸ்திரி மீது உள்ளது.

Shastri

நிச்சயம் அவர் ஒரு சிறப்பான பயிற்சியாளர் தான். அவரால் இந்திய அணியை இன்னும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. அதே போன்று ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் மற்றொரு இந்திய அணி இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement