- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு திரும்ப காரணமே இவர்தான் – விவரம் இதோ

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த வருண் சக்ரவர்த்தி :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது முதல் மூன்று நாட்களும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அக்டோபர் 1-ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடரானது நிறைவடைய உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி முதல் அக்டோபர் 12 வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருவக்கான இந்திய அணி நேற்று பி.சிசி.ஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிக்கப்பட்டு தற்போது பயிற்சிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழகச் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமாகிய வருண் சக்கரவர்த்தி இதுவரை 6 போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய வேளையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கௌதம் கம்பீர் பார்க்கப்படுகிறார். ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா அணியின் மென்டராக இருந்த கம்பீர் வருண் சக்கரவர்த்தியின் திறமையை நேரில் கண்டுள்ளார்.

இதையும் படிங்க : தவறான பக்கம் கஷ்டமா இருக்கு.. இதுல இந்தியாவை நினைச்சா.. நியூஸிலாந்து கேப்டன் சௌதீ கவலை பேட்டி

இதன்காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 33 வயதை எட்யுள்ள வருண் சக்கரவர்த்தி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த வாய்ப்பினை கம்பீர அவருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -