கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ஜெர்ஸி எண் வழங்கப்படுவது வழக்கம்.
சிலர் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஜெர்ஸி எண்களை பயன்படுத்திடுவர். அதன் பின்னாளிருக்கும் காரணங்களை அறிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
இந்திய அணிகளின் தூண்களான தோனி,விராட்,ரோகித்சர்மா போன்ற பல வீரர்களின் ஜெர்சி எண்ணிற்கு பின்னாலிருக்கும் காரணங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தோனி
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும் இந்திய அணியின் மிகச்சிறந்த முன்னாள் கேப்டனுமான தோனியின் நம்பர் 7. ஜீலை 7ம் தேதி பிறந்த தோனி தான் பிறந்தநாளான 7ம் தேதியை தன்னுடைய ஜெர்சி எண்ணாக பயன்படுத்தி வருகின்றார். தனக்கு மிகவும் பிடித்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோவின் ஜெர்ஸி எண்ணும் 7தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலியின் எண் 18. விராட்டின் தந்தை விராட்கோலிக்கு 18 வயதாக இருந்தபோது திடீரென இறந்துவிட்டார். அவரது நியாபகமாக விராட் தன்னுடைய 18ம் எண்ணை பயன்படுத்தி வருகின்றார்.
யுவராஜ்சிங்
யுவராஜின் எண் 12. தன்னுடைய பிறந்தநாளான 12-12 தேதியான ராசியான எண் என்று நம்பும் அவர் அதனையே ஜெர்சி எண்ணாக வைத்துக்கொண்டார்.
ரோகித்சர்மா
ரோகித்சர்மாவின் எண் 45. ரோகித்சர்மாவிற்கு ராசியான எண் 9 என்றாலும் ஒற்றை இலக்க எண்ணை விரும்பாத அவர் 4+5 = 9 என்கிற வகையில் 45 என்று வைத்துக்கொண்டாராம்.