வலுக்கட்டயாமாக ஓய்வு பெற வைத்த பிசிசிஐ? ரோஹித், கோலி சொன்னதில் இதை கவனிச்சீங்களா

Rohit and VIrat
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சாதனை படைத்தது.

அத்துடன் 2014 முதல் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

வலுக்கட்டாய ஓய்வு:
ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உலகின் அனைத்து டாப் அணிகளையும் சொல்லி அடித்த அவர்கள் அதிக ரன்கள் குவித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாக உலக சாதனை படைத்துள்ளனர். இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. ஆனால் சூழ்நிலையால் விடை பெறுவதாக ரோகித் சர்மா தன்னுடைய ஓய்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் ரோஹித் சொன்ன ஓய்வு குறிப்பின் பகுதி பின்வருமாறு. “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை எழுந்தது. அதனால் இதுவே ஓய்வை அறிவிப்பதற்கு சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். உலகக்கோப்பையை வென்று விட்டு குட்பாய் செல்வதை விட வேறு நல்ல நேரம் கிடைக்காது” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல ஆட்டநாயகன் விருது வென்ற பின் திடீரென விராட் கோலி அறிவித்தது பின்வருமாறு. ” இதுவே என்னுடைய கடைசி உலகக்கோப்பை. இதுவே நான் இந்தியாவுக்காக கடைசியாக டி20 போட்டி. ஒருவேளை இத்தொடரில் தோல்வியை சந்தித்திருந்தால் கூட இந்த ரகசியத்தை நான் சொல்லியிருக்க மாட்டேன். சூழ்நிலை என்னை வலுக்கட்டாயம் செய்வதற்கு முன்பாக நானே அதை மதிக்கிறேன். இது வெளிப்படையான ரகசியம். இது அடுத்த தலைமுறைக்கு வழி விடுவதற்கான நேரம்” என்று கூறினார்.

இதிலிருந்து இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பு இதற்கு மேல் வாய்ப்பு வழங்க முடியாது என்று என்று விராட் மற்றும் ரோகித்திடம் பிசிசிஐ சொன்னது தெரிய வருகிறது. சொல்லப்போனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ விரும்புவதால் இந்த உலகக் கோப்பையில் ரோஹித் – விராட் விளையாடுவார்களா? என்பது ஒரு கட்டத்தில் கேள்வியாக இருந்தது.

இதையும் படிங்க: இதுக்கு தான் அப்போவே அவரை கிண்டலடிக்காதீங்கன்னு சொன்னேன்.. இந்திய ரசிகர்களை சாடிய சஞ்சய் மஞ்ரேக்கர்

அந்த வகையில் பிசிசிஐ நிர்பந்தத்தின் காரணமாகவே தற்போது விராட், ரோகித் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளார்கள் என்பது அவர்களது கருத்தை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. மொத்தத்தில் அடுத்ததாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வர விருப்பதாலும் இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டும் உலகக்கோப்பை வென்ற கையோடு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

Advertisement