இப்போவே கையெழுத்து போடுறேன்.. அதை செஞ்ச பும்ரா தலைமுறையின் ஒரு பவுலர்.. விராட் கோலி பாராட்டு

Virat Kohli 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதிகாலையிலேயே விமான நிலையத்தில் ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்ற இந்திய அணியினர் பிரதமரை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் திறந்தவெளி பேருந்தில் இந்திய அணியினர் ஊர்வலமாக வந்தனர்.

17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றதால் அவர்களை வரவேற்க இலட்சக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு வெள்ளமாகத் திரண்ட ரசிகர்களுக்கு மத்தியில் பேருந்தில் வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வெற்றியை அவர்களுடன் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் வரவேற்பும் பாராட்டும் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

மகத்தான பும்ரா:
மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 125 கோடி பரிசு தொகையும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டது. அந்த விழாவில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பேசினர். அப்போது பேசிய விராட் கோலியிடம் நம் தேசத்தின் புதையாலாக ஜஸ்ப்ரித் பும்ராவை அறிவிக்க பெட்டிசன் போடலாமா? நீங்கள் அதற்கு கையெழுத்து போடுவீர்களா? என்று தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு விராட் கோலி பதிலளித்து பேசியது பின்வருமாறு. “நான் இப்போதே கையெழுத்து போடுவேன். இந்த டி20 உலகக் கோப்பையை மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்து நமக்கு கொண்டு வந்த நபரின் பெயரை நான் மீண்டும் மீண்டும் சொல்லுவேன். அவர் தான் ஜஸ்ப்ரித் பும்ரா. ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர்”

- Advertisement -

“அவர் எங்களுக்காக விளையாடுவதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது 16, 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த பும்ரா 1 விக்கெட்டையும் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பினார்.

இதையும் படிங்க: இதான் ஆஸிக்கும் இந்தியருக்கும் உள்ள வித்யாசம்.. ரோஹித் சர்மாவின் செய்கையால் ரசிகர்கள் நெகிழ்ச்சி பாராட்டு

அப்படி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் மொத்தம் 15 விக்கெட்டுகள் எடுத்து இந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அந்த வகையில் இந்த உலகக் கோப்பையை பும்ரா தான் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்ததாக விராட் கோலி வெளிப்படையாக பாராட்டினார். மேலும் பும்ரா நமக்காக விளையாட இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement