இதான் ஆஸிக்கும் இந்தியருக்கும் உள்ள வித்யாசம்.. ரோஹித் சர்மாவின் செய்கையால் ரசிகர்கள் நெகிழ்ச்சி பாராட்டு

Rohit Sharma Marsh
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே சொல்லி அடித்த இந்தியா தோல்வியே சந்திக்காமல் 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டமும் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வென்றது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து ஸ்பெஷல் விமானத்தில் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய அணியினர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றனர். அதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் மும்பையின் கடற்கரை சாலையில் திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியினர் ஊர்வலமாக வருவதற்கு தயாரானார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் நெகிழ்ச்சி:
அப்போது டி20 உலகக் கோப்பை லேசாக கரை படித்திருந்ததை கேப்டன் ரோகித் சர்மா பார்த்தார். அதனால் உடனடியாக அங்கிருந்த துணியை எடுத்த ரோஹித் போராடி பெற்ற கனவுக் கோப்பையை பார்த்து பார்த்து துடைத்து கரையை நீக்கினார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இது தான் ஆஸ்திரேலியர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று சமூகவலை தளங்களில் ரோஹித் சர்மாவை பாராட்டி நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

ஏனெனில் கடந்த வருடம் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஆனால் அந்த வெற்றி கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு மது அருந்தினார். சில வெளிநாடுகளில் அதெல்லாம் சகஜம் என்றாலும் இந்திய ரசிகர்களுக்கு அந்த மோசமான செயல் யாருக்குமே பிடிக்கவில்லை.

- Advertisement -

தொடர்ந்து பேரணி சென்ற இந்திய அணியை வரவேற்க இலட்சக்கணக்கான ரசிகர்கள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு கடற்கரை சாலையில் கூடியிருந்தனர். அதனால் இந்திய ரசிகர்களின் வெள்ளத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியினர் மிதந்து வந்தனர். அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற இந்திய அணியினருக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: அந்த 2 பேருக்கும் தலைவணங்குறேன்.. மில்லரை சாய்க்க காற்று ஹெல்ப் பண்ணுச்சு.. மொத்த இந்தியாவுக்கும் சமர்ப்பணம்.. ரோஹித் பேட்டி

அங்கேயும் ஏராளமான ரசிகர்கள் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களது பாராட்டுகளைப் பெற்றுக் கொண்ட ரோகித் சர்மா இந்த கோப்பை மொத்த இந்திய ரசிகர்கள் மற்றும் நாட்டுக்கும் சமர்ப்பிக்கப்படுவதாக கூறினார். அதன் பின் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 125 கோடி பரிசு தொகையை இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கியது. இறுதியில் வான்கடே மைதானத்தை ஆட்டம் பாட்டத்துடன்

Advertisement