இதுக்கு தான் அப்போவே அவரை கிண்டலடிக்காதீங்கன்னு சொன்னேன்.. இந்திய ரசிகர்களை சாடிய சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் தொடர்ச்சியாக இந்தியா தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் அந்தத் தோல்வியை இத்தொடரில் நிறுத்தியுள்ள இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். கடந்த உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். அப்போது பாண்டியா ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

வருந்தும் ரசிகர்கள்:
அத்துடன் ரோஹித் சர்மாவை மும்பை நிர்வாகம் கழற்றி விட்டதற்காக ஏற்பட்ட மொத்த கோபத்தையும் பாண்டியா மீது ரசிகர்கள் கொட்டித் தீர்த்தனர். குறிப்பாக அனைத்து மைதானங்களிலும் பாண்டியாவுக்கு எதிராக இந்திய ரசிகர்களே எதிர்ப்பு முழக்கங்களை செய்தனர். அதையெல்லாம் பொறுத்துக் கொண்ட பாண்டியா இத்தொடரில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் நாட்டுக்காக பெற்ற வெற்றியால் கண்ணீர் விட்டார். அதனால் இவரையா கிண்டலடித்தோம் என்று கொஞ்சம் வருந்தும் இந்திய ரசிகர்கள் தற்போது பாண்டியாவை பாராட்டி வருகின்றனர். முன்னதாக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்ட போது அதிருப்தியடைந்த சஞ்சய் மஞ்ரேக்கர் “மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எதிர்த்த ரசிகர்கள் தற்போது பாண்டியாவை பாராட்டுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஒரு திருப்புமுனை. ஐபிஎல் தொடரில் மக்கள் அனைவரும் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் நான் சொன்னேன். ஏனெனில் அவர் ஃபிக் மேட்ச் பிளேயர்”

இதையும் படிங்க: ஐசிசி கொடுத்ததை விடுங்க.. உ.கோ வென்ற இந்திய அணிக்கு ஜெய் ஷா அறிவித்துள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

“ஃபைனலில் அவர் எடுத்த கிளாஸின், டேவிட் மில்லர், ரபாடா விக்கெட்டுகளை நாம் பலமுறை பார்க்கலாம். மிகப்பெரிய மேடையில் சாம்பியன் வீரரான அவர் இதைச் செய்ததில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் கூட அவர் முக்கிய நேரத்தில் வந்து சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நம்பிக்கையை கொடுத்தார். அதே போல ஃபைனலில் கடைசி ஓவரை அவர் வீசிய போது நீங்கள் பாதுகாப்பாகவே உணர்ந்தீர்கள். அவர் தன்னுடைய உணர்ச்சிகளை இழக்காமல் நன்றாக பந்து வீசினார்” என்று கூறினார்.

Advertisement