கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டி இதற்காத்தான் நடத்தப்படுகிறதாம் – விவரம் இதோ

Indian-Fans
- Advertisement -

வங்கதேச அணி அடுத்த மாதத் துவக்கத்தில் இந்தியா வந்து டி20 கொண்ட தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார்.

Ind

- Advertisement -

மேலும் தற்போது அவ்வாறாக பகலிரவு டெஸ்ட் போட்டி ஏன் நடத்த இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறோம் என்ற கேள்விக்கு விடையாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டெஸ்ட் போட்டிகளின் சுவாரஸ்யம் சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. அதன் பிறகு டெஸ்ட் போட்டியின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஐ.சி.சி எடுத்த நடவடிக்கைதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள்.

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளுக்கும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இலவச டிக்கெட் வழங்கியும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

IND

இதனை சரிசெய்ய இது போன்ற ஒரு யோசனை எடுத்துள்ளதாகவும் பகலிரவு போட்டியாக நடத்தினால் பார்வையாளர்களை அந்த போட்டி அதிகம் கவரும் என்றும் மேலும் ரசிகர்களும் நேரடியாக மைதானத்துக்கு வந்து போட்டியை ரசிப்பார்கள் என்றும் டெஸ்ட் போட்டியை சுவாரஸ்யமாக மாற்றி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த பகல் இரவு போட்டி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டி நடந்த நிலையில் அடுத்து தற்போது இந்தியாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement