வெறும் 6 ரன்ஸ்.. பஞ்சாப்பை சாய்த்து ஈ சாலா கப்பை நிஜமாக்கிய ஆர்சிபி.. வரலாற்றை மாற்றி எழுதி வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பெங்களூருவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நங்கூரமாக விளையாடினார். எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 16 (9) ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த மயங் அகர்வால் 24 (18), கேப்டன் ரஜத் படிதார் 26 (16) ரன்களை அதிரடியாக எடுத்து அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடத் தடுமாறிய விராட் கோலி 43 (35) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதே போல மிடில் ஆர்டரில் மிரட்டலாக விளையாடிய லிவிங்ஸ்டன் 25 (15), ஜிதேஷ் சர்மா 24 (10) ரன்களை அதிரடியாக எடுத்தப் போதிலும் அதைப் பெரிதாக மாற்றாமல் பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

பஞ்சாப் சொதப்பல்:

கடைசியில் ரொமாரியா செஃபார்ட் 17 (9), க்ருனால் பாண்டியா 5 (4) ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள். அதனால் 20 ஓவரில் ஆர்சிபி 190/9 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், கெய்ல் ஜெமிஷன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு 43 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரியான்ஸ் ஆர்யா 24, ப்ரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லிஸ் 39 (23) ரன்கள் விளாசி போராடி விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

பெங்களூரு சாதனை வெற்றி:

ஆனால் அப்போது நேஹல் வதேரா 15, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 என 2 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் புவனேஸ்வர் குமார் எடுத்த பெரிய திருப்புமுனையை உண்டாக்கினார். அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய பஞ்சாப்புக்கு சசாங் சிங் அதிரடியாக விளையாடிய வெற்றிக்குப் போராடினார். ஆனால் இந்தப் பக்கம் ஓமர்சாய் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

இறுதியில் சசாங் சிங் 61* (30) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் 184/7 ரன்களை மட்டுமே எடுத்த பஞ்சாப் தோற்று முதல் கோப்பையை கோட்டை விட்டது. மறுபுறம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆர்சிபி 17 வருடங்கள் கழித்து ஒரு வழியாக தங்களுடைய முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் விராட் கோலி கண்ணீர் மல்க ஏபி டீ வில்லியர்ஸ், கெய்ல் ஆகியோருடன் சேர்ந்து வெற்றியைஜ் கொண்டாடினார்.

இதையும் படிங்க: 3 ரன்ஸ் 3 விக்கெட்.. 190 அடித்த ஆர்சிபியை ஒரே ஓவரில் மடக்கி மேஜிக் செய்த அர்ஷ்தீப்.. பஞ்சாப் வெல்லுமா?

அதே போல் 18 வருடங்களாக ஈ சாலா கப் நம்தே என்று ஓயாமல் முழங்கி வந்த பெங்களூரு ரசிகர்களின் கனவு நிஜமானது. அதனால் 17 வருட தோல்வி வரலாற்றை மாற்றி எழுதி பெற்ற சரித்திர வெற்றியை ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடத் துவங்கியுள்ளனர். அந்த அணிக்கு அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், க்ருனால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement