- Advertisement -
ஐ.பி.எல்

கனமழையால் ஆர்.சி.பி – கே.கே.ஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? – விவரம் இதோ

கடந்த மே 8-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று மே 17-ஆம் தேதி மீண்டும் துவங்கியுள்ளது. இன்று நடைபெறயிருக்கும் முக்கிய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? :

இருந்தாலும் இந்த போட்டி நடைபெற இருக்கும் சின்னசாமி மைதானத்தில் விடாமல் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்தப்போட்டி பாதியில் ரத்தானால் என்ன நடக்கும்? என்பது குறித்த கேள்விகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கே.கே.ஆர் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்தானால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளின் இடையே மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி பார்க்கையில் பெங்களூரு அணி ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் வேளையில் 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுவிடும். அதேவேளையில் கொல்கத்தா அணியானது வெறும் 12 புள்ளிகளை மட்டும் தான் பெரும்.

- Advertisement -

எனவே கடைசி லீக் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகிவிடும். மறுபுறம் பெங்களூரு அணிக்கு இன்னும் இரண்டு லீக் ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால் அவர்கள் அதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிலைபெற்று பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நான் இருந்திருந்தா கண்டிப்பா ரோஹித்தை அந்த முடிவு எடுக்க விட்டிருக்க மாட்டேன் – ரவி சாஸ்திரி

தற்போது வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் நிச்சயம் இந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -