இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கு ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

RCB2019
- Advertisement -

2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 வது சீசன் திட்டமிட்டபடி மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிகபட்சமாக ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பவில்லை என்றால் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்காது எனவும் பிசிசிஐ தரப்பால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

Ipl cup

- Advertisement -

இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கிரிக்கெட் வாரியமும் தங்களது வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே துவங்கும் பயிற்சி முகாம் இந்த கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னமே மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற அணிகளின் பயிற்சி முகாம்களும் தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி தலைமையிலான பயிற்சி முகாம் மார்ச் 20ஆம் தேதி துவங்கப்பட இருந்தது. ஆனால் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் பயிற்சி முகாமை பெங்களூர் கிரிக்கெட் வாரியம் புதிய தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.

rcb

இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் வெளிவந்த செய்தியின்படி போட்டி நடைபெற வாய்பில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

“விளையாட்டை விட வீரர்களின் உடல் நலமும் மனநலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். கொரோனா காரணமாக மார்ச் 20இல் நடைபெற இருந்த பயிற்சி முகாம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை வீரர்களும் பின்பற்றி உரிய பாதுகாப்புடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் படி அணி நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது”.

Rcb

இந்த வருடமாவது தங்கள் அணி கோப்பையை கைப்பற்றும் எதிர்பார்த்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement