ஆர்.சி.பி அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர். இனி அவங்கள அசச்சிக்க முடியாது – பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன் இதோ

Abrcb

ஐபிஎல் தொடரின் 14வது சீசனுக்கான இன்றைய ஆறாவது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே தொடரில் முதல் வெற்றியைப் பெற்றதால் அதே உத்வேகத்துடனும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது.

RcbvsMi-1

இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியில் தோற்று உள்ளதால் தொடரில் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி இந்த தொடருக்கு முன்பாக கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த தேவ்தத் படிக்கல் இப்போது சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவை முடிந்து மீண்டும் விளையாட தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார்.

padikkal

அதேபோன்று இம்முறையும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் துவங்கும் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. படிக்கல் அணியில் இணைவதால் சபாஷ் அகமது அணியிலிருந்து நீக்கப்படுகிறார். இது தவிர வேறு மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

படிக்கல் வருகை நிச்சயம் பெங்களூர் அணிக்கு பெரிய பலத்தை தரும் என்றும் ஏற்கனவே பெங்களூர் அணி இந்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக காணப்படுவதால் அவரின் வருகையால் அந்த அணி இன்னும் பலமாகத் திகழும் என்று கூறப்படுகிறது. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான விளையாடும் ஆர்.சி.பி அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் :

Padikkal 3

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ரஜாத் பட்டிதர், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.