ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் இந்தத் தொடர் மே 25ஆம் தேதி அதே நகரில் நிறைவு பெறுகிறது. பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் ஒன்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் மே 20, 21 ஆகிய தேதிகளில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. குவாலிபயர் 2 மற்றும் ஃபைனல் கொல்கத்தாவில் மே 23, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் தங்களது கனவு முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் பெங்களூரு அணி ரஜத் படிதார் தலைமையில் விளையாட உள்ளது. தங்களது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை ஓப்பனிங் போட்டியில் அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்கிறது. இத்தொடரில் பெங்களூரு தங்களுடைய சொந்த ஊரில் 7 வெளியூரில் 7 போட்டியில் விளையாட உள்ளது.
பெங்களூரு அட்டவணை:
2008இல் துவங்கப்பட்ட இந்தத் தொடரில் இதுவரை அனைத்து சீசன்களிலும் விளையாடிய பெங்களூரு இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. அதனால் கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்துள்ள அந்த அணி இம்முறை முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்க உள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான பெங்களூரு அணியின் அட்டவணை:
(* குறியிட்ட போட்டிகள் 3.30, மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு துவங்கும்)
1. மார்ச் 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா
2. மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
3. ஏப்ரல் 2: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு
4. ஏப்ரல் 7: மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
முழுமையான அட்டவணை:
5. ஏப்ரல் 10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெலோ கேபிட்டல்ஸ், பெங்களூரு*
6. ஏப்ரல் 13: ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர்
7. ஏப்ரல் 18: ராயல் சேலஞ்சர்ஸ் – பெங்களூரு பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு*
8. ஏப்ரல் 20: பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சண்டிகர்
9. ஏப்ரல் 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மும்பையில் 7.. சென்னையுடன் களத்தை துவக்கும் மும்பை அணியின் முழு அட்டவணை இதோ
10. ஏப்ரல் 27: டெல்லி கேப்பிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி
11. மே 3: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
12. மே 9: லக்னோ சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
13. மே 13: ராயல் சேலஞ்சர்ஸ் – பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு
14. மே 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு



