ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அதில் குவாலிபயர் ஒன்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் மே 20, 21 ஆகிய தேதிகளில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. குவாலிபயர் 2 மற்றும் ஃபைனல் கொல்கத்தாவில் மே 23, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. 5 கோப்பைகளை வென்ற பரம எதிரியான சென்னையை அதன் சொந்த மண்ணில் மும்பை சந்திக்கிறது. இந்தத் தொடரில் மும்பை தங்களுடைய சொந்த மண்ணில் 7 போட்டிகளையும் வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாடுகிறது.
மும்பை அட்டவணை:
கடந்த வருடம் ஹர்திக் பாண்டியா தலைமையில் சுமாராக விளையாடிய மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதிலும் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் மும்பை ரசிகர்களை பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே இம்முறை அவற்றையெல்லாம் கடந்து 6வது கோப்பையை வெல்ல மும்பை களமிறங்க உள்ளது.
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முழுமையான அட்டவணை (* குறியிட்ட போட்டிகள் மதியம் 3.30, மற்ற அனைத்தும் இரவு 7.30 மணிக்கு துவங்கும்)
1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், சென்னை
2. மார்ச் 29: குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்
3. மார்ச் 31: மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
மும்பையில் 7 போட்டிகள்:
4. ஏப்ரல் 4: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ், லக்னோ
5. ஏப்ரல் 7: மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
6. ஏப்ரல் 13: டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ், டெல்லி
7. ஏப்ரல் 17: மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை
8. ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சென்னையில் 7.. மும்பையுடன் வேட்டையை துவங்கும் சிஎஸ்கே அணியின்.. முழு அட்டவணை இதோ
9. ஏப்ரல் 23: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
10. ஏப்ரல் 27: மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை*
11. மே 1: ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ், ஜெய்ப்பூர்
12. மே 6: மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ், மும்பை
13. மே 11: பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், தரம்சாலா*
14. மே 15: மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை



