43 வயதானலும் சிங்கம் சிங்கமே.. மின்னல் வேகத்தில் மிரட்டிய தல தோனி.. ஆர்சிபி 196 ரன்ஸ்.. கோலி மோசமான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 மார்ச் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 8வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பிலிப்ஸ் சால்ட் சென்னை பவுலர்களை அடித்து நொறுக்கத் துவங்கினார்.

அப்போது நூர் அஹ்மத் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தை சால்ட் அடிக்கத் தவறினார். அதைக் கச்சிதமாக பிடித்த தோனி அவர் மீண்டும் வெள்ளைக்கோட்டுக்குள் காலை வைப்பதற்குள் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். குறிப்பாக பிலிப் சால்ட் கால் வெள்ளைக்கோட்டுக்குள் இருந்தும் ஒரு சில நூல்கள் காற்றில் மேலே இருந்தது. அந்த தருணத்தில் தோனி கச்சிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்து சால்ட்டை 32 (16) ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

தோனி அசத்தல்:

43 வயதிலும் இளம் விக்கெட் கீப்பர்களை விட இவ்வளவு வேகமாக கீப்பிங் செய்த தோனி வயதானாலும் தமது ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். மேலும் தமது வயதைக் கிண்டலடித்து விமர்சிப்பவர்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார் என்று சொல்லலாம். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் விராட் கோலி நிதானமாக விளையாடினார். எதிர்புறம் வந்த தேவ்தூத் படிக்கல் அதிரடி காட்ட முயற்சித்து 27 (14) ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் மெதுவாக விளையாடிய விராட் கோலியை 31 (30) ரன்னில் அவுட்டாக்கிய நூர் அஹ்மத் அதற்கடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டனையும் 10 ரன்னில் போல்ட்டாக்கினார். இருப்பினும் கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி அசத்தார். குறிப்பாக மிடில் ஆடரில் 3 கேட்ச்கள் தவற விட்டதை பயன்படுத்தி சிறப்பாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (32) ரன்னில் பதிரனா வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

கோலி மோசமான சாதனை:

இறுதியில் ஜித்தேஷ் சர்மா 12 (6), டிம் டேவிட் 22* (8) ரன்களை அதிரடியாக எடுத்த உதவியுடன் பெங்களூரு 20 ஓவரில் ரன்கள் எடுத்தது. சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3, பதிரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் விராட் கோலி 103.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சுமாராகவே பேட்டிங் செய்தார்.

இதையும் படிங்க: பதிரனா பேக்.. இதுக்கெல்லாம் கவலைப்படல.. டாஸிலயே சிஎஸ்கே’வுக்கு மறைமுக சவால் விட்ட ஆர்சிபி கேப்டன்

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி 110.40 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 400 ரன்கள் அடித்த வீரர்களில் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மனோஜ் திவாரி 111.71 ஸ்ட்ரைக் ரேட்டில் 400+ ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை.

Advertisement