நாங்க ரொம்ப ட்ரை பண்ணோம்.. ஆனா முகமது சிராஜை வாங்கமுடியாம போக இதுவே காரணம் – ஆர்.சி.பி வெளியிட்ட தகவல்

Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆர்.சி.பி அணிக்காக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். அதிலும் குறிப்பாக விராட் கோலியின் ஆதரவோடு தனது மோசமான சூழலில் இருந்து நீண்ட அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். முகமது சிராஜின் இந்த கரியருக்கு ஆர்.சி.பி அணியின் பங்கு என்பது அளப்பரியது.

முகமது சிராஜை வாங்க முடியாமல் போக இதுவே காரணம் : ஆர்.சி.பி விளக்கம்

ஏனெனில் தனது கரியரின் ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்த அவருக்கு ஆர்.சி.பி அணியில் கிடைத்த வாய்ப்பின் மூலமே அனைத்தும் நல்ல வழியில் சென்றது. முகமது சிராஜ் ஆர்.சி.பி அணியுடன் இணைந்து தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முழுமூச்சுடன் விளையாடி வந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை ஆர்.சி.பி அணி வாங்க தவறியது. பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12 கோடியே 25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் குஜராத் அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் ஆர்.சி.பி அணி முகமது சிராஜை ஏலத்தில் எடுக்காதது ஏன்? என்பது குறித்த தகவலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : நாங்கள் முகமது சிராஜை வாங்க வேண்டும் என்று முழு மனதுடன் இருந்தோம்.

- Advertisement -

ஆனால் ஏலத்தில் அவருடைய தொகை அதிகரித்துக் கொண்டே சென்றதும் ஒரு கட்டத்தில் நாங்கள் அவருக்கு இணையான மற்றொரு பந்துவீச்சாளர் வாங்க முடியாது என்று நினைத்தோம். அதனாலே முகமது சிராஜை வாங்க முடியாமல் போனது. அதேபோன்று இம்முறை புவனேஸ்வர் குமாரை வாங்க வேண்டும் என்ற திட்டமும் எங்களிடம் இருந்ததால் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை சென்று நாங்கள் அவரை வாங்கினோம்.

இதையும் படிங்க : விராட், ரோஹித் அதுக்கு தகுதியானவங்க.. 2008லேயே உலகத்தரம்ன்னு அவர் சொன்னதை கோலி நிரூப்பிச்சுட்டாரு.. டெய்லர்

அதன் காரணமாகவே முகமது சிராஜை வாங்க முடியாமல் தவற விட்டோம் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக மிகச்சிறப்பான வெளிப்படுத்திய புவனேஷ் குமார் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement