ஆர்.சி.பி அணியிலுருந்து வெளியேறிய 2 வீரர்கள். கடைசி நேரத்தில் ஏற்பட்ட திருப்பம் – விவரம் இதோ

RCB

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் தற்போது பிளே ஆப் சுற்றில் மோதி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் தற்போது இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடி வருகின்றன.

RCBvsKKR

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக டெல்லி அணியுடன் மோதும். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும். இதன் காரணமாக தற்போது இந்த கடைசி சில போட்டிகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் ஆர்சிபி அணியில் இருந்து இரண்டு வீரர்கள் வெளியேறி உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இலங்கை அணியை சேர்ந்த வீரர்களான ஹசரங்கா மற்றும் சமீரா ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடருக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கையானது தகுதி சுற்றில் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.

Hasaranga

அதன் காரணமாக அவர்கள் பயிற்சிப் போட்டிகள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் இருவரும் இலங்கை அணியில் இணைந்து இருக்க வேண்டும் என்பதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில் :

- Advertisement -

இதையும் படிங்க : தோனி குறித்த ட்வீட்டை டெலிட் செய்த விராட் கோலி. என்ன காரணம் – விவரம் இதோ

இலங்கை அணியின் வீரர்களான ஹஸரங்கா மற்றும் சமீரா ஆகியோர் பெங்களூரு அணிக்காக கடுமையாக உழைத்திருக்கிறனர், அவர்களுக்கு நன்றி. இலங்கை அணியில் இணைந்து அவர்கள் விளையாட வாழ்த்துக்கள் என தெரிவித்து அவர்களை வழியனுப்பி உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக மஹேலா ஜெயவர்த்தனே செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement