மிகசிறந்த பினிஷெர் என மீண்டும் நிரூபித்த டிகே ! டெல்லியை சாய்த்த பெங்களூரு அபார வெற்றி

Dinesh Karthi 66
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன. புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூருவுக்கு இளம் அனுஜ் ராவத் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அவருடன் களமிறங்கிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 8 (11) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். போதாக்குறைக்கு பவர் பிளே முடிவின்போது நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 (14) ரன்களில் ரன் அவுட்டானாதல் 40/3 என ஆரம்பத்திலேயே பெங்களூரு தடுமாறியது.

Glen Maxwell

- Advertisement -

அந்த நிலைமையில் பெங்களூருவை காப்பாற்ற களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் போராட அவருடன் களமிறங்கிய இளம் வீரர் பிரபுதேசாய் பொறுப்பில்லாமல் 6 (5) ரன்களில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் 34 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 55 ரன்கள் எடுத்து போராடிய மேக்ஸ்வெலும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

தூக்கி நிறுத்திய டிகே:
அதன் காரணமாக 92/5 என மீண்டும் தடுமாறிய பெங்களூருவை அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இளம் வீரர் சபாஷ் அகமதுடன் இணைந்து அதிரடியாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் ஒருபுறம் சபாஸ் அகமது கம்பெனி கொடுக்கும் வகையில் 21 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 32* ரன்கள் எடுக்க மறுபுறம் பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து டெல்லி பவுலர்களை புரட்டினார். குறிப்பாக வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய கடைசிநேர ஒரே ஓவரில் 4, 4, 4, 6, 6, 4 என 28 ரன்களை தெறிக்கவிட்ட அவர் மொத்தம் 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

Dinesh Karthik Rawat

ஆரம்பத்தில் அபாரமாக பந்துவீசிய டெல்லியை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 97* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 20 ஓவர்களில் 189/5 என்ற நல்ல ஸ்கோரை பெங்களூரு எட்டியது. அதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி சா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த நிலையில் பிரிதிவி ஷா 16 (13) ரன்களில் அவுட்டானர்.

- Advertisement -

டெல்லி போராடி தோல்வி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஒருசில ஓவர்களிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக ஆடிய மிட்சேல் மார்ஷ் 14 (24) ரன்களில் அவுட்டானர். அந்த நேரத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோவ்மன் போவல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 112/4 என தடுமாறிய டெல்லியின் வெற்றி கேள்விக்குறியானது.

DC vs RCB Rishabh Pant

அந்த நேரத்தில் அடுத்து வந்த லலித் யாதவ் 1 ரன்னில் அவுட்டானதால் போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஷார்துல் தாகூர் 17 (9), அக்சர் படேல் 10* (7) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 173/7 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி பரிதாபமாக தோல்வி அடைந்தது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

மாஸ் பினிஷர் டிகே:
இந்த அபாரமான வெற்றிக்கு 66* ரன்கள் விளாசி பினிஷெராக முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவரின் அந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த பிச்சர் தினேஷ் கார்த்திக் தான் என பாராட்டி வருகின்றனர். ஏனெனில் இந்த வருடம் இதுவரை அவர் பங்கேற்ற 6 போட்டிகளில் இதே போல கடைசி நேரத்தில் களமிறங்கி முறையே 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14), 66* (34) என அதிரடியாக பேட்டிங் செய்து 5 போட்டிகளில் கடைசி வரை அவுட்டே ஆகாமல் 197 ரன்களை 209.57 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

Dinesh Karthik 2

அதிலும் நேற்றைய போட்டியில் 92/5 என தடுமாறிய பெங்களூருவை தனி ஒருவனாக கடைசி நேரத்தில் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் தனது அபாரக் பினிஷிங் திறமையால் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து தன்னை ஒரு மிகச் சிறந்த பினிசர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement