- Advertisement -
ஐ.பி.எல்

மகளிர் ஐபிஎல்: 6க்கு 6 வெற்றி.. புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்சிபி.. பிளே ஆஃப்க்கு தகுதி

இந்தியாவில் 2026 மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 19ஆம் தேதி வதோதராவில் நடைபெற்ற 12வது போட்டியில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கி ஆர்சிபி 20 ஓவரில் 178/6 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கௌதமி நாயக் பொறுப்புடன் 73 (55), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 26 (23), ரிச்சா கோஸ் 27 (20), ராதா யாதவ் 17 (8) ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்லே கார்ட்னர், காஸ்வி கெளதம் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு பெத் மூனி 3, சோபி டேவின் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆர்சிபி அபாரம்:

அடுத்து வந்த கனிகா அகுஜாவும் டக் அவுட்டானதால் 5/3 என குஜராத் ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது கேப்டன் ஆஸ்லே கார்ட்னர் பொறுப்புடன் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் நிதானத்தைக் காட்டிய அனுஷ்கா சர்மா 18 (20) ரன்னில் அவுட்டானார். அதே போல லோயர் ஆர்டரில் காஸ்வி கௌதம் 4, ஜார்ஜியா வேர்ஹம் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

மறுபுறம் தனியாளாக போராடிய கேப்டன் ஆஸ்லே அரை சதமடித்து 54 (43) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் பார்தி புல்மாலி 14, தனுஜா கன்வெர் 11*, ரேணுகா சிங் 6* ரன்களை எடுத்தும் 20 ஓவரில் குஜராத் 117/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

6க்கு 6 சாதனை வெற்றி:

அந்த அணிக்கு அதிகபட்சமாக சயலி சாட்கேர் 3, நாடின் டீ கிளார்க் 2 விக்கெட்டுகளை சாயத்தனர். இதையும் சேர்த்து இந்த வருடம் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஆர்சிபி அணி 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஆர்சிபி அணி 2026 மகளிர் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: நியூசி அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அது மட்டுமின்றி 2025 மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 2026 மகளிர் தொடரில் ஆர்சிபி முதல் 5 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அதிக (6) வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையையும் ஆர்சிபி படைத்துள்ளது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் (2 முறை, 2023 மற்றும் 2023/24 சீசனில்) மற்றும் ஆர்சிபி (2024/25 சீசனில்) தொடர்ச்சியாக தலா 5 வெற்றிகளைப் பெற்றதே முந்தைய சாதனை.

- Advertisement -