நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜனவரி 21-ஆம் தேதி பஞ்சாப் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இந்திய நேரப்படி ஜனவரி 21-ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு போட்டி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் கடைசி தொடர் என்பதனால் இந்த தொடரானது பலரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் இந்த டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த உத்தேசப் பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.
அந்த வகையில் நாளைய இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய வீரர்களின் விவரங்கள் இதோ : இந்த முதல் டி20 போட்டியில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவது உறுதி. மூன்றாவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும், நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடலாம் என்று தெரிகிறது.
ஐந்தாவது இடத்தில் துணை கேப்டன் அக்சர் பட்டேலும், 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எட்டாவது இடத்தில் அதிரடி பினிஷரான ரிங்கு சிங் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது. 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம்பிடிப்பார்கள்.
11-வது இடத்தில் வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்புள்ளது. ஒருவேளை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மற்றும் இடம்பெற்று கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : தோனி மற்றும் ரோஹித்திடம் இருந்த அந்த திறமை தற்போதைய கேப்டன் கில்லிடம் இல்லை – அஷ்வின் விளாசல்
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர் / இஷான் கிஷன், 5) அக்சர் படேல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) ரிங்கு சிங், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அர்ஷ்தீப் சிங் / குல்தீப் யாதவ், 11) வருண் சக்கரவர்த்தி.



