நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்து மோசமான படுதோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் டிசைடர் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி இப்படி தோற்பது இதுவே முதல்முறை.
சுப்மன் கில்லின் கேப்டன்சியை விளாசிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது எவ்வளவு விமர்சனங்கள் எழுந்துள்ளதோ அதே வேளையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் கேப்டன்சி மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சுப்மன் கில்லின் படுமோசமான கேப்டன்சியை விளாசியுள்ளார்.
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் அவர் படுமோசமான கேப்டன்சியை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் செய்த தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வதாகவும் சுப்மன் கில்லின் கேப்டன்சியை விளாசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ஐந்துக்கு பூஜ்யம் (5-0) என்ற கணக்கில் இருந்தது போன்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் முதல் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் இடத்தில் இருந்தனர். அடுத்த இரண்டு ஆட்டங்களில் நியூசிலாந்து அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. கடந்த காலங்களில் இந்திய அணி அழுத்தமான நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற வழியை கண்டுபிடித்து வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் தற்போதைய சுப்மன் கில்லின் தலைமையிலான இந்திய அணி அழுத்தத்தில் தடுமாறி வருகிறது. தோனி மற்றும் ரோஹித் போன்ற கேப்டன்கள் வீரர்களை சரியான இடத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தனர். அதேபோன்று ஒரு வீரருடைய திறமை என்ன? அவரை எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும்? என்பது ஒரு கேப்டனாக தெரிந்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியா 9க்கு 5 தோல்வியை சந்திக்க கம்பீரின் இந்த அணுகுமுறையே காரணம்.. இதை மாத்துங்க.. ரஹானே விமர்சனம்
தோனியும், ரோகிக்கும் அதை சரியாக செய்த நிலையில் சுப்மன் கில் எந்தெந்த வீரர்களை எப்போது பயன்படுத்த வேண்டும்? என்று தெரியாமல் தடுமாறுகிறார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை போட்டியின் எந்த நேரத்தில், எந்த வீரர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பது சுத்தமாக அவருக்கு தெரியவில்லை என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் காட்டமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



