6 விக்கெட்ஸ் 40 ரன்ஸ்.. மும்பையை முடித்து வரலாறு படைத்த எலிஸ் பெரி.. ஆர்சிபி ஃபிளே ஆப் சென்றதா?

WPL Ellis Perry 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் மார்ச் 12ஆம் தேதி நடைபெற்ற 19வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ஹைய்லே மேத்யூஸ் 26 ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீராங்கனை சஞ்சனாவை 30 (21) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்மன் பிரீத்தை கோல்டன் அவுட்டாக்கினார். அதோடு நிற்காமல் நட் ஸ்கீவரை 10 ரன்களில் காலி செய்த அவர் அடுத்ததாக வந்த எமிலியா கெர் 2, அமௌன்ஜோத் கௌரை 4 ரன்கள் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

மிரட்டிய பெரி:
அதனால் 73/5 என தடுமாறிய மும்பை மேற்கொண்டு அதிரடியாக விளையாட முடியாமல் பெங்களூரு அணியின் தரமான பந்து வீச்சில் 19 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசி மும்பையை சுருட்டிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்த அவர் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்தார். அதைத்தொடர்ந்து 114 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் மந்தனா 11, சோஃபி மோலினிக்ஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த சோஃபி டேவின் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 39/3 என தடுமாறிய பெங்களூருவுக்கு மீண்டும் பேட்டிங்கில் கெத்து காட்டிய எலிஸ் பெரி நிதானமாக விளையாடி 40* (38) ரன்கள் குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் ரிச்சா கோஸ் அதிரடியாக 36* (28) ரன்கள் எடுத்ததால் 15 ஓவரிலேயே 115/3 ரன்கள் எடுத்த பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சந்தித்து வந்த 3 தொடர் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இல்லையாம் – புதிய கேப்டன் யார்?

அத்துடன் 8 லீக் போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான பெங்களூரு 8 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது. குறிப்பாக கடந்த வருடம் விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று வெளியேறிய அந்த அணி இந்த வருடம் சிறப்பாக விளையாடி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பெங்களூரு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement