டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இல்லையாம் – புதிய கேப்டன் யார்?

Cummins
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முடிந்த 50 உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதோடு ஏற்கனவே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

இப்படி தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கோப்பைகளை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு குறி வைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்காக தற்போதே தங்களது அணியை தயார்படுத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக மிட்சல் மார்ஷ் தான் ஆஸ்திரேலியா அணியை டி20 உலககோப்பை தொடரில் தலைமை தாங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே பேட் கம்மின்ஸ் அளித்திருந்த ஒரு பேட்டியில் : டி20 கேப்டன் சுமை இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டன்ஷிப் பதிவியை விரும்பவில்லை என்று தெரிந்ததால் தற்காலிக டி20 கேப்டனான மிட்சல் மார்ஷ் தான் நிச்சயமாக டி20 உலககோப்பை தொடரின் கேப்டனாகவும் தொடர்வார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்திய வீரர்கள் அப்படி கெட்டுப்போக பாண்டியா தான் காரணம்.. ரோஹித்திடம் திறமை இருக்கு.. பிரவீன் குமார்

ஏற்கனவே ஆரோன் பின்ச் ஓய்வினை அறிவித்தபோது பொறுப்பேற்ற மிட்சல் மார்ஷ் அடுத்தடுத்து ஆஸ்திரேலியா அணியின் டி20 தொடர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த வேளையில் உலக கோப்பை தொடரிலும் அவர் கேப்டனாக செயல்பட அந்த அணியின் பயிற்சியாளரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement