இந்திய வீரர்கள் அப்படி கெட்டுப்போக பாண்டியா தான் காரணம்.. ரோஹித்திடம் திறமை இருக்கு.. பிரவீன் குமார்

Praveen Kumar 2
- Advertisement -

ஐபிஎல் 2024 20 கிரிக்கெட் தொடரில் மும்பையின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாடுவது அந்த அணியின் பெரும்பாலான ரசிகர்களே விரும்பவில்லை என்று சொல்லலாம். ஏனெனில் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா மும்பையை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்து சாதனை படைக்க வைத்தார்.

அதன் காரணமாக தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா முன்னேறியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட தரமான அவரை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வருங்காலத்தை கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்ஜாக தம்மை கேப்டனாக உருவாக்கிய குஜராத்துக்கு 2 வருடத்திலேயே பாண்டியா டாட்டா காட்டியது வேறு கதை.

- Advertisement -

பாண்டியா மட்டும் ஸ்பெஷலா:
ஒரு கட்டத்தில் கபில் தேவுக்கு பின் தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அசத்திய ஹர்திக் பாண்டியா நாளடைவில் காயத்தை சந்தித்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை முற்றிலும் நிறுத்தி விட்டார். அத்துடன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அடிக்கடி காயத்தை சந்தித்து வெளியேறும் அவர் இந்தியாவுக்காக 100% போட்டிகளிலும் விளையாடுவதில்லை.

இது ஒருபுறமிருக்க ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் போன்ற வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடததற்காக 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். ஆனால் கடந்த பல வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டின் பக்கமே தலை வைத்து படுக்காத பாண்டியாவுக்கு மட்டும் மீண்டும் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் பிசிசிஐ இடம் கொடுத்துள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா போன்றவர்களாலேயே மற்ற இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று முன்னாள் வீரர் பிரவீன் குமார் சாடியுள்ளார்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா இன்னும் 3 வருடங்கள் மும்பைக்கு கேப்டனாக செயல்படும் தகுதியை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடருக்கு 2 மாதங்கள் முன்பாக காயமடைந்ததால் நாட்டுக்காக விளையாடாத நீங்கள் மாநில அணிக்காகவும் உள்ளூரில் விளையாடவில்லை. ஆனால் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மட்டும் வருகிறீர்கள். இப்படி நடக்கக் கூடாது”

இதையும் படிங்க: ரொம்ப கஷ்டப்பட்டாரு.. கடவுளுக்கு நன்றி.. சீக்கிரமா இந்தியாவுக்காக ரிஷப் பண்ட் அதை செய்வாரு.. தவான் பேட்டி

“நீங்கள் பணம் சம்பாதிப்பது பரவாயில்லை. அதில் எந்தத் தவறுமில்லை. அதே சமயம் நாட்டுக்காகவும் உங்களை வளர்த்த மாநில அணிக்காகவும் நீங்கள் விளையாட வேண்டும். உங்களால் தற்போது மற்ற வீரர்களும் ஐபிஎல் தொடருக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு வருடம் மட்டுமல்ல இன்னும் 2, 3 வருடங்கள் ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர். ஆனால் அது மும்பை அணியின் கையில் உள்ளது” என்று கூறினார்.

Advertisement