ரொம்ப கஷ்டப்பட்டாரு.. கடவுளுக்கு நன்றி.. சீக்கிரமா இந்தியாவுக்காக ரிஷப் பண்ட் அதை செய்வாரு.. தவான் பேட்டி

Shikhar Dhawan
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக இந்தியாவுக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடும் அவர் தோனியை மிஞ்சி வெளிநாடுகளில் சதம் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இருப்பினும் கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன் காரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடாத அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து குணமடைவதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்ட அவர் தற்போது மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடுவதற்கு தயாராகியுள்ளார்.

- Advertisement -

வாழ்த்திய தவான்:
அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அவர் ஃபிட்டாக இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிகப்படியான காயங்களை சந்தித்ததால் அன்றாட வாழ்வில் ரிஷப் பண்ட் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாக மூத்த இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். அதே சமயங்களில் இந்தளவுக்கு ரிஷப் பண்ட் குணமடைந்து வந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

அத்துடன் ஐபிஎல் 2024 தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்து வருங்காலங்களில் இந்தியாவுக்காக முன்பை விட அபாரமாக விளையாடி அற்புதங்களை நிகழ்த்துவார் என்றும் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னுடைய மாநில வீரரான அவருடன் சேர்ந்து பல வருடங்களாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள தவான் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடுவதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவ்வளவு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடந்த ஒரு வருடத்தில் அவர் மிகவும் கடினமாக உழைத்து நேர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தினார். முதல் சில மாதங்களில் எதையும் அசைக்க முடியாத அளவுக்கு அவர் வலியில் இருந்தார்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வாய்ப்பு.. வைரலாகும் செய்தி – உண்மை என்ன?

“குறிப்பாக குளியல் அறைக்கு செல்வதற்கு கூட அவருக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அந்த கடினமான காலங்களில் அமைதி மற்றும் நேர்மறையை அவர் காண்பித்தது பெரிய விஷயமாகும். அது அவருக்கு நிறைய பலத்தை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் விளையாடி நாட்டுக்காக அற்புதங்களை நிகழ்த்துவார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்” எனக் கூறினார்.

Advertisement