- Advertisement -
ஐ.பி.எல்

10 ஓவரில் 106 ரன்ஸ்.. பஞ்சாப்பை ஓடவிட்டு ஃபைனல் சென்ற ஆர்சிபி.. 9 வருடம் கழித்து சாதனை.. கோப்பை உறுதியானதா?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே ஆர்சிபி பவுலர்களின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி நிதானமாகவும் விளையாடத் தவறியது. அதனால் 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

பஞ்சாப் சொதப்பல்:

பிரியான்ஸ் ஆர்யா 7, ஜோஸ் இங்லிஷ் 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2, நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3, முஷீர் கான் 0 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஓமர்சாய் 18, பிரப்சிம்ரன் சிங் 18, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களை எடுத்தார்கள்.

மறுபுறம் அனல் பறக்க பவுலிங் செய்த ஆர்சிபி அணிக்கு அதிகபட்சமாக சூயஸ் சர்மா 3, ஜோஸ் ஹேசல்வுட் 3, யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்த விளையாடி பெங்களூரு அணிக்கு விராட் கோலி 12 (12) ரன்கள் எடுத்து கெய்ல் ஜெமிசன் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். ஆனால் எதிர்ப்புறம் பில் சால்ட் பஞ்சாப் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

ஃபைனலில் பெங்களூரு:

இந்தப் பக்கம் அந்த மயங் அகர்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 (13) ரன்னில் முசீர் கான் சுழலில் சிக்கினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் வெளுத்து வாங்கிய சால்ட் அரை சதத்தை அடித்து 56* (27) ரன்கள் குவித்தார். இறுதியில் கேப்டன் படிதார் 15* (8) ரன்களை எடுத்ததால் 10 ஓவரிலேயே 106/2 ரன்களை எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா சுயநலமே இல்லாம இதை செஞ்சதாலேயே.. கில்லுக்கு கேப்டன்ஷிப் கிடைச்சுது.. கவாஸ்கர் பாராட்டு

இதன் வாயிலாக 2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 2009, 2011, 2016 வருடங்களுக்குப் பின் 4 முறையாகவும் 9 வருடங்கள் கழித்தும் ஆர்சிபி அணி ஐபிஎல் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால் இம்முறை கோப்பை பெங்களூரு அணிக்கே என்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். மறுபுறம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் போராடாமலேயே தோற்று குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

- Advertisement -