ஜஸ்ப்ரித் பும்ரா சுயநலமே இல்லாம இதை செஞ்சதாலேயே.. கில்லுக்கு கேப்டன்ஷிப் கிடைச்சுது.. கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் இல்லாத போது கேப்டனாக 8 விக்கெட்டுகளை எடுத்து அவர் முதல் போட்டியில் இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்தார்.

இருப்பினும் அத்தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் தற்போது குணமடைந்து ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். தற்போதைய சூழ்நிலையில் தம்மால் இங்கிலாந்தில் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தேர்வுக்குழுவிடம் ஜஸ்ப்ரித் பும்ரா வெளிப்படையாக சொல்லி விட்டார். அதனாலேயே அவருக்கு பதிலாக கில்லை கேப்டனாக தேர்ந்தெடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

- Advertisement -

சுயநலமற்ற பும்ரா:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்ஷிப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று சொன்னதாலேயே சுப்மன் கில்லுக்கு அந்தப் பதவி கிடைத்துள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா எனும் இந்திய அணியின் சுயநலமற்ற வீரர் தம்மால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தேர்வாளர்களிடம் தகவல் தெரிவித்தார்”

“அவர் தன்னுடைய முதுகுப் பகுதியில் இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக சொல்லி விட்டார். அதன் காரணமாக தேர்வாளர்கள் புதிய கேப்டனாக சுப்மனை தேர்ந்தெடுக்கும் வேலை மிகவும் சுலபமானது. சுப்மன் கில்லுக்கு ஒரு கையாக உதவி செய்யப்போகும் பும்ரா இந்திய பவுலிங் துறையை முன்னின்று வழி நடத்தப் போகிறார்”

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

“அத்துடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுப்பதற்கான திட்டங்களையும் அவர் மற்ற இந்திய பவுலர்களுக்கு கொடுப்பார். இந்திய அணி தற்போது போதுமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதனால் அவர்கள் மற்ற அணிகளை போல் 16 வீரர்களை தேர்ந்தெடுக்காமல் 18 வீரர்களை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்காது”

இதையும் படிங்க: 14.1 ஓவரில் 101க்கு ஆல் அவுட்.. அனலை தெறிக்க விட்ட ஆர்சிபி.. 2008 டெல்லியை முந்தி பஞ்சாப் மோசமான சாதனை

“அதன் காரணமாக அவர்களால் 6 புதிய பந்துகளை பயன்படுத்தி வீசக்கூடிய பவுலர்கள் மற்றும் மித வேகத்தில் வீசக்கூடிய நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. இந்தத் தொடர் 5 போட்டிகள் 6 வாரங்கள் நடைபெற உள்ளது. அதனால் நெட் பவுலர்களுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படும்” என்று கூறினார். அவர் கூறுவது போல பும்ரா நினைத்திருந்தால் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதியில் சில போட்டிகளில் ஓய்வெடுத்திருக்க முடியும். இருப்பினும் இந்திய அணியின் நலனைக் கருதிய அவர் தன்னுடைய ஃபிட்னெஸ் நிலையை வெளிப்படையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement