14.1 ஓவரில் 101க்கு ஆல் அவுட்.. அனலை தெறிக்க விட்ட ஆர்சிபி.. 2008 டெல்லியை முந்தி பஞ்சாப் மோசமான சாதனை

PBKS vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பெங்களூரு முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷ் 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஜோஸ் ஹேசல்வுட் வேகத்தில் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். போதாகுறைக்கு நேஹல் வதேரா 8, சசாங் சிங் 3 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவைக் கொடுத்தனர்.

- Advertisement -

பஞ்சாப் திணறல்:

அதனால் 60/6 என ஆரம்பத்திலேயே திண்டாடிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதிரடி காட்ட முயற்சித்த மார்கஸ் ஸ்டோய்னிஸை 26 (17) ரன்னில் காலி செய்த சூயஸ் ஷர்மா அடுத்ததாக வந்த முசீர் கானை டக் அவுட்டாக்கினார். இறுதியில் பஞ்சாப்பை 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த ஆர்சிபி சுருட்டி வீசியது.

இதன் வாயிலாக பிளே ஆஃப் சுற்றில் 2வது குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பஞ்சாப் சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான எலிமினேட்டரில் லக்னோவும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது போக ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளே போட்டியில் மிகவும் குறைந்த ஓவர்கள் (14.1) பேட்டிங் செய்த அணி என்ற மோசமான சாதனையையும் பஞ்சாப் படைத்துள்ளது.

- Advertisement -

மிரட்டிய ஆர்சிபி:

இதற்கு 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி 16.1 ஓவர்கள் பேட்டிங் செய்ததே முந்தைய மோசமான சாதனை. இதனால் இப்போட்டியில் பஞ்சாப் வெற்றி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் பவர் பிளே முதலே அனல் பறக்கும் வகையில் பவுலிங் செய்த பெங்களூரு அணிக்கு சூயஸ் சர்மா 3, ஜோஸ் ஹேசல்வுட் 3, யாஷ் தயாள் 2, செபார்ட் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையும் படிங்க: அந்த ஒரு கால் வந்தா இந்திய அணிக்காக நான் மீண்டும் விளையாட ரெடி – புஜாரா வெளிப்படை

இதைத் தொடர்ந்து 102 என்ற சுலபமான இலக்கை ஆர்சிபி துரத்துகிறது. அதை எடுத்தால் அந்த அணி நேரடியாக ஃபைனலுக்குச் செல்லும். அதனால் இம்முறை முதல் கோப்பையை வெல்வது உறுதி என்று பெங்களூரு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.

Advertisement