சி.எஸ்.கே பிளான் பண்ணி வச்சிருந்த வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கவுள்ள ஆர்.சி.பி – செம பிளான் தான்

CSK-vs-RCB
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசனுக்கான வீரர்களின் மினி ஏலமானது துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தது. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் சில வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சிஎஸ்கே அணி டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்தரா, முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வெளிநாட்டு வீரர்களை வாங்கியிருந்தது.

அதேபோன்று சில உள்நாட்டு வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது. இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்காக வாங்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் வரை தான் விளையாட அவரது நாடு கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக ஐபிஎல் தொடரின் இறுதி கட்டப் போட்டிகளில் அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழலுக்கு சிஎஸ்கே அணி தள்ளப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஷமர் ஜோசப்பை சி.எஸ்.கே அணி மாற்று வீரராக தேர்வு செய்ய திட்டம் தீட்டியிருந்தது.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணி அவரை அனுகுவதற்கு முன்னதாக ஆர்சிபி அணி அவரை ஒப்பந்தம் செய்ய அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷமர் ஜோசப்பை ஏற்கனவே பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் விளையாடும் பெஷாவர் ஜால்மி அணி ஒப்பந்தம் செய்திருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் அவருக்கு ஏதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்படி சிஎஸ்கே அணி அவரை அனுகுவதற்கு முன்னதாகவே தற்போது ஆர்சிபி அணி அவரை அனுகியுள்ளது. அதாவது ஆர்சிபி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள டாம் கரண் தற்போது காயம் காரணமாக எதிர்வரும் சீசனில் விளையாட முடியாத சூழலில் இருப்பதினால் அவருக்கு மாற்று வீரராக ஷமர் ஜோசப்பை ஆர்.சி.பி அணி அணுகியுள்ளது.

இதையும் படிங்க : லாரா போல தனியாளாக 209 ரன்ஸ்.. சேவாக்கின் 20 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. புதிய சாதனை

இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக அவரை அணியில் இணைக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சலுகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் அந்த சலுகையை ஏற்றுக் கொண்டால் நிச்சயம் சென்னை அணிக்கு முன்னதாகவே அவர் ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement