ஐபிஎல் 2022 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – முழு அட்டவணை, வீரர்கள் விவரம், உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் 4 முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ipl

- Advertisement -

முன்னதாக இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. மேலும் வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் வீரர்களின் நலன் கருதி மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

கப் அடிக்குமா பெங்களூரு:
குறிப்பாக 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மும்பை, புனே ஆகிய நகரங்களில் இருக்கும் வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த லீக் சுற்றில் மோதும் அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

RCB

அந்த வகையில் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வெல்லாத போதிலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஒரு முறை கூட கோப்பையை வாங்கி தர முடியவில்லை. அதனால் ஏற்கனவே விமர்சனங்களுக்கு உள்ளான வாங்கி வந்த அவர் பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் இந்தியாவின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனுடன் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் 2022 தொடரை சந்திக்க உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு முழு அட்டவணை இதோ:
மார்ச் 27, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் V பஞ்சாப் கிங்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

மார்ச் 30, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

- Advertisement -

ஏப்ரல் 5, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் V ராஜஸ்தான் ராயல்ஸ், வான்கடே மைதானம், மும்பை.

ஏப்ரல் 9, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V மும்பை இந்தியன்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

- Advertisement -

ஏப்ரல் 12, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ் டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

ஏப்ரல் 16, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V டெல்லி கேப்பிடல் வான்கடே மைதானம், மும்பை.

ஏப்ரல் 19, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், டிஒய் பாட்டில் மைதானம், மும்பை.

ஏப்ரல் 23, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

ஏப்ரல் 26, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V ராஜஸ்தான் ராயல்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

ஏப்ரல் 30, மதியம் 3.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V குஜராத் டைட்டன்ஸ், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

மே 4, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், எம்சிஏ மைதானம், புனே.

மே 8, மதியம் 3.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வான்கடே மைதானம், மும்பை.

மே 13, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் V பஞ்சாப் கிங்ஸ், ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

மே 19, இரவு 7.30 மணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V குஜராத் டைட்டன்ஸ், வான்கடே மைதானம், மும்பை.

rcb

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதோ:
விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமத் சிராஜ் (7 கோடி), ஹர்ஷல் படேல் (10.75 கோடி), வணிந்து ஹஸரங்கா (10.75 கோடி), ஜோஷ் ஹெஸல்வுட் (7.75 கோடி), பாப் டு பிளெஸ்ஸிஸ் (7 கோடி), தினேஷ் கார்த்திக் (5.5 கோடி), அனுஜ் ராவத் (3.4 கோடி), ஷபாஸ் அஹமத் (2.4 கோடி), டேவிட் வில்லி (2 கோடி), ஷெரிபான் ருத்தர்போர்ட் (1 கோடி), மஹிபால் லொம்ரோர் (95 லட்சம்), பின் ஆலன் (80 லட்சம்), ஜேசன் பெஹரேண்டோர்ஃப் (75 லட்சம்),சித்தார்த் கவுல் (75 லட்சம்), கர்ன் சர்மா (50 லட்சம்), சூயஸ் பிரபுதேசாய் ( 30 லட்சம்), சாமா மில்லின்ட் (25 லட்சம்), அநீஸ்வர் கவுதம் (20 லட்சம்), லுவனித் சிசோடியா (20 லட்சம்), ஆகாஷ் தீப் (20 லட்சம்)

ஐபிஎல் 2022 தொடரில் களம் இறங்கப் போகும் உத்தேச 11 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதோ:
பப் டு பிளேஸிஸ்*, அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்*, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), மஹிபால் லோமரர், ஷபாஸ் அஹமட், வணிந்து ஹஸரங்கா*, ஹர்சல் படேல், ஜோஸ் ஹேசல்வுட்*, முகமத் சிராஜ். (* – வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement