- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்.சி.பி அணி இறுதிப்போட்டியில் ஜெயிக்கணும்னா இந்த மாற்றத்தை செய்தே ஆகனும் – ரசிகர்கள் கோரிக்கை

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஆர்.சி.பி அணியில் இந்த மாற்றம் வேண்டும் : ரசிகர்கள் கோரிக்கை

அதன்படி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற இந்த நான்கு அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்ட காத்திருக்கிறது. இந்த தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் பணியை வீழ்த்திய ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

அதன்பின்னர் நடைபெற்ற எலுமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்ததாக இரண்டாவது குவாலிபர் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஜூன் 1-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட நேரடியாக தகுதிபெற்ற ஆர்.சி.பி அணி என்னென்ன மாற்றங்களை இறுதிப்போட்டியில் செய்தால் அந்த அணி முழு பலத்துடன் விளையாடும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ஆர்.சி.பி அணியின் ரசிகர்களும் சமூகவலைதளத்தின் மூலம் தங்களது அணியில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில போட்டிகளாகவே தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்து வரும் டிம் டேவிட் இறுதிப்போட்டிக்கான பெங்களூரு அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : இந்திய இளம் வீரர்களால் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் அதை சாதித்து காட்டமுடியும் – ஏ.பி டிவில்லியர்ஸ் நம்பிக்கை

ஏனெனில் டிம் டேவிட் காயத்தால் விளையாடாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் விளையாடி வரும் லிவிங்ஸ்டன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் டிம் டேவிடை கொண்டு வந்தால் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் வரிசை பலப்படும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -