மீண்டும் வேலையை காட்டிய ஆர்.சி.பி – இவங்களுக்கு கொஞ்சம் கூட ராசியே இல்லப்பா – ரசிகர்கள் குமுறல்

RCB vs RR
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது 15-வது சீசனை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக முறை கோப்பையை வென்ற அணிகளாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் என முதல் இரு இடங்களில் உள்ளது. இப்படி ஐபிஎல் தொடரில் இருபெரும் ஜாம்பவான்களாக இருக்கும் இவ்விரு அணிகளுக்கு அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு கொண்ட அணியாக ஆர்.சி.பி அணி பார்க்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பல பிரம்மாண்டமான பிளேயர்களை தங்கள் அணியில் இணைத்து பலமான அணியாக திகழ்ந்து வந்தாலும் அவர்களால் இந்த 15 ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

RCB

- Advertisement -

அதிலும் குறிப்பாக விராட் கோலி கேப்டன் பதவியேற்ற பின்னரும் ஆர்சிபி அணி மிகப் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டாலும் அவரது தலைமையில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. எனவே இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய டு பிளேசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்த சீசனில் பெங்களூரு அணியை வழி நடத்தினார்.

அவரது தலைமையில் சிறப்பாக விளையாடி வந்த பெங்களூரு அணியானது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி நிச்சயம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் நினைத்தனர்.

Virat Kohli Du Plessis RCB vs GT

ஆனால் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூர் அணியானது சிறப்பான தொடக்கத்தை பெற்று 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்து இருந்தாலும் அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வரும் வேளையில் தற்போது பெங்களூரு அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து ரசிகர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க : டீம்க்கு பாரமா இருக்காரு, அசத்தும் தமிழக வீரரை நியாயமில்லாமல் விமர்சிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் – ரசிகர்கள் கோபம்

அந்த வகையில் ரசிகர்கள் குறிப்பிட்ட சில கருத்துகளில் : எப்போதுமே ஐ.பி.எல் கோப்பைக்கும் ஆர்.சி.பி அணிக்கும் ராசியே கிடையாது. இப்படி ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான துவக்கத்தை பெற்றபின்னர் 180 முதல் 190 ரன்கள் வரை செல்வார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் இப்படியா 160 ரன்களுக்கு ஆட்டம் இழப்பது என்பது போன்று தங்களது ஆதங்கத்தினை சமூக வலைதளம் வாயிலாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement