டீம்க்கு பாரமா இருக்காரு, அசத்தும் தமிழக வீரரை நியாயமில்லாமல் விமர்சிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் – ரசிகர்கள் கோபம்

Sanjay
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து நாக்-அவுட் சுற்று போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மே 24இல் துவங்கிய பிளே ஆப் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதிய குவாலிஃபயர் 1 போட்டியில் மோதின. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம் போராடி தோற்ற ராஜஸ்தான் லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வென்று வந்த பெங்களூருக்கு எதிராக மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பில் களமிறங்குகிறது.

RR Ashwin

அந்த அணிக்காக இந்த வருடம் முதல் முறையாக 5 கோடி என்ற நல்ல தொகைக்கு விளையாடும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினை அந்த அணி நிர்வாகம் மிகச்சிறந்த வகையில் அனைத்து வகைகளிலும் பயன்படுத்திக் கொள்வதாக பல முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளார்கள். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய அனுபவம் கொண்ட அவரை இந்த வருடம் நிறைய போட்டிகளில் அந்த அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களமிறக்கியது.

- Advertisement -

கலக்கும் அஷ்வின்:
அந்த அத்தனை வாய்ப்புகளிலும் அவர் ஒருமுறை கூட சோடை போகவில்லை என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில் ஒன்று அதிரடியாக விளையாடுகிறார் அல்லது முடியவில்லை என்று தெரிந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிட்டையர் அவுட்டாகி சென்று அடுத்த பேட்ஸ்மேனுக்கு வழி விடுகிறார். சொல்லப் போனால் 2009 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வரலாற்றிலேயே இந்த வருடம் தான் முதல் முறையாக அரைசதம் அடித்து அதிகபட்சமாக 11 இன்னிங்ஸ்களில் 185* ரன்களை 146.83 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

ashwin

குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் ராஜஸ்தான் தடுமாறியபோது 40* (23) ரன்கள் எடுத்து அவர் பினிஷிங் கொடுத்த காரணத்தாலேயே ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் லக்னோவை முந்தி 2-வது இடத்தைப் பிடித்த அந்த அணி தற்போது குவாலிபயர் 1 போட்டியில் தோற்ற பின்பும் கூட இன்னும் வெளியேறாமல் உள்ளது. இருப்பினும் பந்துவீச்சில் 15 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள அவர் 7.33 என்ற சிறப்பான எக்கனாமியில் குறைவான ரன்களைக் கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

பாரமாக இருக்கிறார்:
மொத்தத்தில் ராஜஸ்தான் அணிக்கு மறைமுக ஆல்-ரவுண்டராக அசத்தி வரும் அவர் பந்துவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுவதால் அந்த அணி பாரமாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் காரணமே இல்லாமல் விமர்சித்துள்ளார். இது பற்றி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கு சாதகமான பிளாட் பிட்ச்களில் நிறைய வித்தியாசங்களை முயற்சித்தாலும் ராஜஸ்தானுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறார். அதுபோன்ற சூழ்நிலையில் அவர் குறைவான அளவு மட்டுமே ஆப் ஸ்பின் பந்துகளை வீசுகிறார். ஆனால் பிட்ச் சுழலுக்கு சாதகமளித்தால் மட்டும் ஆபத்தான பவுலராக தென்படுகிறார். எனவே பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சஹால் மற்றும் அஷ்வின் ஆகியோரால் ராஜஸ்தான் அணியால் பயனடைய முடியும்” என்று கூறினார்.

Sanjay

அதாவது மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே அஷ்வின் விக்கெட்டுகளை எடுக்க கூடியவராக இருக்கிறார் என்று கூறும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்கள் இருப்பதால் அவர் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

- Advertisement -

அவர் கூறுவது போல இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் பிட்ச்களில் அஸ்வின் விக்கெட் எடுக்க தடுமாறுகிறார் என்றாலும் ரன்களை வாரி வழங்காமல் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக அதுவும் 7.33 என்ற எக்கனாமியில் பாராட்டும் அளவுக்கு பந்து வீசி வருகிறார். அப்படி இருக்க அடிப்படை ஆதாரமில்லாமல் இப்படிப் பேசுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது குறிப்பாக தமிழக ரசிகர்கள் கோபமடைகின்றனர்.

Ravichandran Ashwin RR

பெங்களூரு வெற்றி:
அதேபோல் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஆரம்ப கட்டத்தில் அட்டகாசமாக பந்து வீசினாலும் 16 – 20 வரையிலான கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீச தடுமாறுவதுடன் ரன்களை வாரி வழங்குகிறார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தவறு செய்தால் தான் முன்னேற முடியும் ! அவரின் அட்வைஸ் தான் எனது புதுமைக்கு காரணம் – நெகிழும் அஷ்வின்

மேலும் அந்த அணியின் இளம் இந்திய பவுலர் பிரசித் கிருஷ்ணா சுமாராக செயல்படுவதாக கூறும் அவர் வெஸ்ட் இண்டிசின் ஓபேத் மெக்காய் மட்டுமே கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதாக தெரிவித்தார். இதன் காரணமாக இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூரு வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

Advertisement