தவறு செய்தால் தான் முன்னேற முடியும் ! அவரின் அட்வைஸ் தான் எனது புதுமைக்கு காரணம் – நெகிழும் அஷ்வின்

Ravichandran Ashwin RR .jpeg
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றில் அசத்திய ராஜஸ்தான் ராயல் பிளே ஆப் சுற்றில் குஜராத்துக்கு எதிராக நடந்த குவாலிபயர் 1 போட்டியில் தோற்றாலும் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூருவை எதிர்கொண்டு மீண்டும் பைனலுக்குள் நுழைய போராட உள்ளது. அந்த அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வினை அந்த அணி நிர்வாகம் முழுமையாக நம்பி பலவிதமான வேலைகளைச் செய்யவைத்து வெற்றியும் கண்டு வருகிறது என்றே கூறலாம். சாதாரணமாக ஒரு சுழல் பந்து வீச்சாளரான அவரின் பேட்டிங் திறமையை நம்பி அந்த அணி நிர்வாகம் நிறைய போட்டிகளில் 3-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தது.

ashwin

- Advertisement -

அதில் ஒருமுறை கூட சோடை போகாத அவர் தேவையான ரன்களை அடிக்கிறார், முடியவில்லை என்றால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்த பேட்ஸ்மேனுக்கு வழிவிடும் வகையில் ரிட்டையர்ட் அவுட்டாகி சென்று விடுகிறார். அதிலும் சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 40* (23) ரன்கள் விளாசிய அவர் வெற்றிகரமாக பினிஷிங் செய்த காரணத்தாலேயே ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் தற்போது குவாலிபயர் 1 போட்டியில் தோற்றாலும் கூட மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்றுள்ளது.

புதுமையான அஷ்வின்:
பொதுவாகவே கிரிக்கெட்டின் நுணுக்கங்களை பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் அஸ்வின் சமீப காலங்களாக சுழல் பந்துவீச்சை தாண்டி பேட்டிங், பீல்டிங் போன்ற அம்சங்களில் நிறைய புதுமையை கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். எடுத்துக்காட்டாக 2019இல் பட்லரை மன்கட் செய்த அவர் அதற்காக உலக அளவில் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனாலும் விதிமுறைக்கு உட்பட்டே அதை செய்தேன் என்று விடாப்பிடியாக இருந்த அவரின் கோட்பாடு சமீபத்தில் மன்கட் என்பது சாதாரண ரன் அவுட் போன்றது என்றும் விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல என்றும் எம்சிசி தாமாக முன்வந்து அடிப்படை விதி முறையை மாற்றும் அளவுக்கு மெகா வெற்றி கண்டது.

Ashwin Buttler Mankad

அதனால் சமீப தருணங்களில் அவர் செய்யும் ஒவ்வொரு புதுமையான விஷயங்களும் ரசிகர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுகுப்பின் இந்தாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள அஷ்வின் 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அன்று முதல் இன்று வரை முக்கிய முதன்மை சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.

- Advertisement -

டங்கன் ப்ளட்சர்:
கிரிக்கெட்டில் பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் கண்டுள்ள அஷ்வின் 2013 வாக்கில் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சர் கொடுத்த அறிவுரைகள் தான் எதற்கும் பயப்படாமல் புதுமையை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை தமக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி ராஜஸ்தான் அணியின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு :

Duncan Fletcher

“சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு டங்கன் பிளட்சர் எனும் தலைமை பயிற்சியாளர் இருந்தார். அப்போது அவரிடம் சென்று “எப்படி முன்னேறுவது, எப்படி சிறப்பாக மாறுவது?” என்று நான் அடிக்கடி கேள்வி எழுப்புவேன். அதற்கு “தவறு செய்து ரசிகர்களுக்கு முன்பாக தோல்வி அடைந்தால் மட்டுமே உங்களால் சிறப்பாக மாற முடியும். அப்படித்தான் நான் எனது வாழ்நாள் முழுக்க செய்து வருகிறேன்” என்று பதிலளித்தார்”

- Advertisement -

“அந்த வகையில் விதி முறைகளுக்கு அப்பால் செயல்பட விரும்பிய நான் நிறைய விமர்சனங்களை சந்தித்தேன். சில நேரங்களில் இவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? இவர் ஓவர் லட்சியம் கொண்டவரா? தேவையில்லாத அதிகப் பிரசங்கித் தனமாக செயல்படுகிறாரா? என்று நிறைய பேர் பேசுகின்றனர். ஆனாலும் அதை மட்டுமே நான் செய்தேன். அது போன்ற செயல்களை என்னிடம் இருந்து எடுத்துவிட்டால் இப்படிப்பட்ட நபர் உங்களுக்கு கிடைக்க மாட்டார். எனவே ஆம் நான் நிறைய பிரச்சனைகளுடன் வருவேன். இருப்பினும் நான் பயன்படுத்தப்பட்டு என்னுடைய வெளிப்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டால் என்னால் எல்லைகளையும் விதிமுறைகளையும் கடந்து ஆராய்ந்து வெற்றி காண முடியும்” என்று பேசினார்.

Ashwin

அதாவது எப்போதுமே புதுமையை செய்ய முயற்சித்தால் அதற்காக அனைவரும் விமர்சனம் செய்வார்கள் என்று தெரிவிக்கும் அஷ்வின் அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி பெறுவதற்கு நேர்வழியில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மறைந்து கிடக்கும் பயன்பாடுகளை தைரியமாக செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : முக்கிய போட்டியில் விளையாட அழைத்த கிரிக்கெட் வாரியம். வேண்டாம் என மறுத்த விரிதிமான் சஹா – விவரம் இதோ

இதுபோன்ற தைரியமான விஷயங்களை விமர்சனத்திற்கு அஞ்சாமல் செய்யும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் தான் தமக்கு கொடுத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement