முக்கிய போட்டியில் விளையாட அழைத்த கிரிக்கெட் வாரியம். வேண்டாம் என மறுத்த விரிதிமான் சஹா – விவரம் இதோ

Saha
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான விருதிமான் சஹா கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 143 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ச்சியாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தாலும் தோனியின் இருப்பு காரணமாக பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Saha-3

ஆனாலும் இன்றுவரை தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்கான வரிசையில் காத்திருக்கும் அவர் அவ்வப்போது இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது பெங்கால் கிரிக்கெட் வாரியம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முக்கிய ஆட்டத்தில் விளையாட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

- Advertisement -

அதன்படி ஜூன் 6ஆம் தேதி பெங்களூரில் நடைபெற இருக்கும் ரஞ்சி தொடரில் காலிறுதி சுற்றுக்கான போட்டியில் பெங்கால் அணிக்காக அவர் விளையாட அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அழைப்பை மறுத்து தான் இந்த தொடரில் விளையாட போவதில்லை என்று சஹா தெரிவித்துள்ளார்.

saha

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு பெங்கால் அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஐபிஎல் தொடருக்கு பின்னர் சிறிது ஓய்வு தேவை என்கிற காரணத்தினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் வாரியம் தலைமையில் வெளியான அறிக்கையில் : விருத்திமான் சஹாவை ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் விளையாட நாங்கள் அழைப்பு விடுத்தோம். ஆனால் எங்களது அழைப்பை மறுத்து அவர் இந்த தொடரில் விளையாட போவதில்லை என்று தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 100 மேட்ச் விளையாடினால் அழிக்க முடியாத சாதனை செய்து விடுவார் – ஜாம்பவானின் பாராட்டை அள்ளிய ரிஷப் பண்ட்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடிய சஹா 312 ரன்கள் குவித்துள்ளார். அதோடு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியிலும் சஹா குஜராத் அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement