டாஸ் எப்படி போட்டாலும் மும்பை பக்கம் விழுதே எப்படி? ஆர்சிபி போட்டியில் அம்பயர்கள் செய்த 5 சம்பவங்கள்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த மும்பை மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. மறுபுறம் 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் நடுவர்கள் பல தருணங்களில் மும்பை அணிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இந்த வருடம் ஜியோ சினிமா சேனலில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வெவ்வேறு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிவோம்.

- Advertisement -

மும்பை பக்கம்:
அதில் தலைக்கு மேலே இருந்து போட்டியை பார்க்கும் வகையில் ஸ்பைடர் கேமரா வசதியும் உள்ளது. அதில் டாஸ் வீசப்பட்ட நிகழ்வை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வருகிறது. அதாவது நாணயம் கீழே விழுந்ததும் அதை அப்படியே எடுக்காத அம்பயர் மேலே கையை வைத்து தலைகீழாக எடுத்து பார்த்து விட்டு மும்பை டாஸ் வென்றதாக அறிவித்தது அப்பட்டமாக தெரிகிறது.

அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் மும்பை அணிக்கு மட்டும் டாஸ் எப்படி போட்டாலும் அவர்கள் பக்கம் தான் விழும் என்று விமர்சிக்கின்றனர். அத்துடன் பெங்களூரு அணி அடுத்த ஒரு பவுண்டரியை மும்பை வீரர் தடுத்த போது பந்து அவருடைய தொடையில் பட்டது. அதே சமயம் அவருடைய கைகளும் பவுண்டரி எல்லையை தொட்டு விடுகிறது. ஆனால் அதற்கு பவுண்டரி வழங்காத நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக அமைதியாக இருந்தனர்.

- Advertisement -

அதே போல பும்ரா வீசிய பந்தில் மஹிபால் லோம்ரர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். அதை லோம்ரர் டிஆர்எஸ் எடுத்த போது பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்வது போல் தெரிந்தது. ஆனாலும் பந்து ஸ்டம்ப் மீது உரசியதால் “அம்பயர்ஸ் கால்” அடிப்படையில் அவருக்கு மீண்டும் 3வது நடுவர் அவுட் கொடுத்தார். மற்றொரு சமயத்தில் தினேஷ் கார்த்திக் இடுப்புக்கு மேலே பந்து வருவது நன்றாக தெரிகிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம.. இப்போதைக்கு ரிட்டையராகும் ஐடியா இல்ல.. ரோஹித் சர்மா ஓப்பன்டாக்

ஆனாலும் அவருடைய இடுப்பு ஒரு மீட்டர் உயரம் என்றும் பந்து 0.99 மீட்டர் உயரத்தில் வந்தது என்றும் சொன்ன மூன்றாவது நடுவர் நோபால் கொடுக்க மறுத்து விட்டார். அது போக இசான் கிசான் எதிர்கொண்ட ஒரு பந்து கோட்டுக்கு உள்ளே வந்தும் அது ஒயிட் என்று நடுவர்கள் அறிவித்தனர். அந்த வகையில் கண்ணுக்குத் தெரிந்த வரை இப்போட்டியில் 5 தருணங்களில் மும்பைக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொண்டதாக ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement