இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20 ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது.
சி.எஸ்.கே அணியின் சாதனையை சமன் செய்த ஆர்.சி.பி :
அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவித்தது.
பின்னர் 241 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதோடு இந்த வெற்றியின் மூலம் தற்போது நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை அணியானது 4 போட்டியில் மூன்று தோல்விகளை தழுவி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஆர்.சி.பி அணி சிஎஸ்கே அணியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளது. அந்த வகையில் ஆர்.சி.பி அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதிகமுறை வெற்றி பெற்ற அணியாக சிஎஸ்கே அணி முதல் இடத்தில் இருந்தது.
இதையும் படிங்க : 2 போட்டியாவே இப்படித்தான் நடக்குது.. பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி
சி.எஸ்.கே அணி 23 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி அணி 200 ரன்களுக்கு மேல் அடித்து மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் அவர்களும் 23 முறை எதிரணியை 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.



