மேஜையில் அந்த 4 பேரை வாங்கி மாஸ்டர் பிளானை பயிரிட்டோம்.. ஆர்சிபி கோப்பை வென்ற திட்டம் பற்றி ஃபிளவர்

Andy Flower
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்று சாதனை படைத்தது. குறிப்பாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி சாய்த்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர்ச்சியானத் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு தங்களுடைய முதல் கோப்பையை வென்று கிண்டல்களையும் விமர்சனங்களையும் உடைத்தது.

அந்த அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு பவுலிங் துறை சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜோஸ் ஹேசல்வுட், க்ருனால் பாண்டியா, சூயஸ் சர்மா போன்ற புதிதாக வாங்கப்பட்ட பவுலர்கள் அந்த அணியின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். இந்நிலையில் இந்த வரலாற்று வெற்றிக்கான திட்டத்தை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் மேஜையில் வகுத்ததாக ஆர்சிபி அணியின் ஆன்டி ஃபிளவர் கூறியுள்ளார்.

- Advertisement -

செலவிடாம பயிரிட்டோம்:

குறிப்பாக கடந்த காலங்களில் ஆர்சிபி அணி மேக்ஸ்வெல் போன்ற ஒருசில நட்சத்திர வீரர்களை வாங்குவதற்காக பல கோடி ரூபாய்களை கொட்டி கொடுத்தது. ஆனால் இம்முறை குறிப்பிட்ட வீரரை வாங்குவதற்காக செலவிடாமல் தரமான நிறைய வீரர்களை வாங்குவதற்காகப் பணத்தை பகிர்ந்து பயிரிட்டதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக ஹேசல்வுட், க்ருனால் பாண்டியா, புவனேஸ்வர், சூயஸ் சர்மா ஆகிய 4 பவுலர்களை வாங்கியது வெற்றிக்கு வித்திட்டதாகவும் ஃப்ளவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற வெற்றிகளைப் பெறுவதற்கு ஏலம் தான் முதல் பெரியப் படியாகும். அங்கே நீங்கள் முடிந்தளவு சரியாக செயல்பட வேண்டும். அங்கே மோ போபட் (இயக்குனர்) வகுத்த முக்கிய தத்துவம் என்னவெனில் குறிப்பிட்ட பெரிய வீரர் மேலே அதிக பணத்தை செலவிடாமல் நல்ல வீரர்கள் மீது சமமாக செலவிட வேண்டும் என்பதாகும்”

- Advertisement -

புதிய வீரர்களால் வெற்றி:

“இம்முறை வலுவான பவுலிங் துறையை உருவாக்குவது முக்கியம் என்று தெரிந்து கொண்டோம். அதற்குத் தகுந்தார் போல் நாங்கள் வேலை செய்தோம். ஏலத்தின் முதல் நாளில் நாங்கள் கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்தோம். நாங்கள் பணத்தை செலவிடுவதற்கு பதிலாக முதலீடு செய்வதாக சிலர் விமர்சித்தார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலியின் கண்ணீரில் சிஎஸ்கே, மும்பையின் ஈஸியான கஷ்டம் தெரியும்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

“ஆனால் முதல் நாளில் செயல்படுத்திய திட்டங்கள் 2வது நாளில் சிறந்த மதிப்பைப் பெறுவதற்கு உதவியது. அதன் காரணமாக புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், ஃசெபார்ட் போன்ற வீரர்களை எங்களால் வாங்க முடிகிறது. அவர்கள் அனைவருமே இந்த வருடம் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். அதே போல எங்களுடைய இளம் லெக் ஸ்பின்னர் சூயஸ் சர்மா எங்களுக்காக அற்புதமாக பௌலிங் செய்தார்” என்று கூறினார்.

Advertisement