9 ஓவரில் 110 ரன்ஸ் அடிச்ச.. ராஜஸ்தானை இதை செஞ்சு தோற்கடிச்சோம்.. ஆர்சிபி கேப்டன் படிதார் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்து தங்களுடைய 6வது வெற்றியைப் பெற்று அசத்தியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70, தேவ்தூத் படிக்கல் 50 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ஜெய்ஸ்வால் 49, சூர்யவன்சி 16, நிதிஷ் ராணா 28, கேப்டன் ரியான் பராக் 22 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 9 ஓவரில் 110 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அப்போது அபாரமாக பவுலிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் ராஜஸ்தானை 194/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றது.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

துருவ் ஜுரேல் 47 ரன்கள் அடித்தும் ஃபினிஷிங் செய்யத் தவறிய நிலையில் பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் சின்னசாமி மைதானத்தில் இந்த வருடம் முதல் முறையாக ஆர்சிபி அணி வெற்றியைப் பெற்று நிம்மதியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் சிறப்பாக பேட்டிங் செய்ததாக கேப்டன் ரஜத் படிதார் பாராட்டியுள்ளார்.

படிதார் மகிழ்ச்சி:

- Advertisement -

ஆனால் கடைசி 10 ஓவர்களில் அபாரமாக பவுலிங் செய்த தங்களுடைய பவுலர்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும் விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமே ரன்களை நிறுத்துவதற்கான வழி என்றும் அவர் கூறியுள்ளார். சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெறும் வழியைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

வெற்றிக்கு காரணம்:

“இது எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றி. இன்று பிட்ச் வித்தியாசமாக இருந்தது. அதில் 10 ஓவர்களுக்கு பின் நன்றாக பவுலிங் செய்த எங்கள் பவுலர்களுக்கு வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் சேரும். அவர்கள் தைரியத்தைக் காண்பித்து அற்புதமாக பௌலிங் செய்தனர். ராஜஸ்தான் அணியும் ஆரம்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ததற்கு பாராட்டுக்கள்”

இதையும் படிங்க: 110/2 டூ 194.. சிஎஸ்கே போல 2009க்குப்பின் ராஜஸ்தான் மோசமான சாதனை.. வெற்றியை பறித்த ஆர்சிபி பிளே ஆஃப் உறுதியா?

“அப்போது நாங்கள் விக்கெட்டுகளை தேடிக் கொண்டிருந்தோம். விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமே எதிரணி ரன்கள் அடிப்பதை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும். நான் எனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி செயல்படுகிறேன். எங்கள் அணியில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உள்ளீடுகள் வெற்றிக்கு நிறைய உதவுகிறது. ஆம் ஒரு வழியாக சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிந்தோம்” என்று கூறினார்.

Advertisement