இந்தியாவை மிஞ்சிய ஆர்சிபி மாபெரும் தனித்துவ உலக சாதனை.. ஆனா கோப்பை ஜெயிக்க முடியாத பரிதாபம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய நான்காவது போட்டியில் ராஜஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஜெய்ப்பூரில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 113*, டு பிளேஸிஸ் 44 ரன்கள் உதவியுடன் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் தன்னுடைய 100வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்து 100* (58) ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்களும் எடுத்து 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் 4 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

- Advertisement -

பயனற்ற உலக சாதனை:
மறுபுறம் 5 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு மீண்டும் பின்னடைவை சந்தித்தது. முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருக்கு வழக்கம் போல விராட் கோலி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* (72) ரன்களை 156.94 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்தார். அத்துடன் 8வது சதத்தை பதிவு செய்த அவர் ஐபிஎல் தொடரில் 7500 ரன்கள் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

ஆனால் கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற இதர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் கடைசியில் 200 ரன்கள் தொட முடியாமல் போனது பெங்களூருவின் தோல்விக்கு காரணமானது. அதே போல பேட்டிங்கில் விராட் கோலி போராடி அடித்த ரன்களையும் பந்து வீச்சில் வழக்கம் போல ஆர்சிபி பவுலர்கள் வள்ளலாக வாரி வழங்கியது தோல்வியை உறுதி செய்தது.

- Advertisement -

அதனால் மீண்டும் இப்போட்டியில் விராட் கோலியின் போராட்டம் பெங்களூரு அணிக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் இப்போட்டியில் அவர் அடித்த சதத்தையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் பெங்களூரு அணி 18 சதங்கள் அடித்துள்ளது. அதாவது ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களை சேர்த்து பெங்களூரு அணி 18 சதங்கள் அடித்துள்ளது.

இதையும் படிங்க: எங்ககிட்ட இருக்க பவருக்கு இதெல்லாம் சும்மா.. பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை உடைத்துள்ள பெங்களூரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ஆனாலும் என்ன பயன் என்பது போல் அனைவரும் சேர்ந்து செயல்படாததால் இதுவரை பெங்களூரு ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அந்த சாதனை பட்டியல் (சதங்கள்):
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 18*
2. இந்தியா : 17
3. பஞ்சாப் கிங்ஸ் : 14
4. ராஜஸ்தான் கிங்ஸ் : 14
5. சோமர்செட் : 13

Advertisement