எங்ககிட்ட இருக்க பவருக்கு இதெல்லாம் சும்மா.. பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 113 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 44 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.1 ஓவரில் 4 விக்க்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் 100 ரன்களையும், சஞ்சு சாம்சன் 69 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : 190 ரன்களுக்குள் இருந்தால் நிச்சயம் எங்களால் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று மைதானத்தில் டியூ இருந்ததால் சேசிங் சற்று சுலபமாகவும் இருக்கும் என்று கணித்தோம்.

- Advertisement -

மேலும் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்த ஸ்கோர் நிச்சயம் சேசிங் செய்யக்கூடிய ஒன்று தான். நாங்கள் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த நான்கு நாட்கள் இடைவெளி உள்ளது. மீண்டும் நாங்கள் ஓய்வெடுத்து பயிற்சி செய்து அடுத்த போட்டிக்கு தயாராக இந்த இடைவெளி உதவும்.

இதையும் படிங்க : பாவம்’யா மனுஷன்.. ஆர்சிபி தோல்விக்கு விராட் கோலி தான் காரணமா? சச்சினை முந்தி 2 பரிதாப சாதனை

இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது எங்களுக்கும் சரி, அணிக்கும் சரி, அவருக்கும் சரி மகிழ்ச்சி அளித்துள்ளது. அவரைப் போன்ற ஒரு வீரர் ஒரு ஆட்டம் க்ளிக் ஆனால் மிகச் சிறப்பான செயல்பாடு வெளிவரும். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement