உள்குத்து வேலையை பார்த்த ஆர்சிபி.. ஹைதராபாத் பர்ஸை காலி செய்த முட்டாள்தனமான சம்பவம்.. கலாய்க்கும் ரசிகர்கள்

RCB vs SRH Auction
- Advertisement -

துபாயில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர். குறிப்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் ஆகிய போட்டிகளில் சதமடித்து இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த டிராவிஸ் ஹெட் 6.8 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

அதை தொடர்ந்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஆர்சிபியின் உள்குத்து:
ஆனால் மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் அவரையும் மிஞ்சி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஐபிஎல் தொடரிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மாபெரும் சாதனை படைத்தார். குறிப்பாக தம்முடைய கேப்டன் பட் கமின்ஸ் படைத்த சாதனையை அவர் அடுத்த 2 மணி நேரத்தில் உடைத்தது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக இந்த ஏலத்தில் 20.25 கோடிகள் மட்டுமே கையிருப்பாக வைத்துக்கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் களமிறங்கியது. அதனால் குறிப்பிட்ட ஒரு வீரருக்காக மட்டும் 10 – 15 கோடிகளை செலவிட முடியாது என்பதை நன்றாக தெரிந்த அந்த அணி நிர்வாகத்தினர் பட் கமின்ஸை வாங்குவதற்காக கடுமையான போட்டியிட்டார்கள். அதற்கு போட்டியாக ஹைதராபாத் நிர்வாகம் வந்ததால் ஒரு கட்டத்தில் அவருடைய மதிப்பு 15 கோடிகளை கடந்தது.

- Advertisement -

அதனால் பெங்களூரு ஏலம் கேட்பதை நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹைதெராபாத் பர்ஸை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே கங்கணம் கட்டியது போல் தொடர்ந்து பெங்களூரு ஏலம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு விடாமல் தொடர்ந்து ஹைதராபாத் பதிலடி கொடுத்ததால் கமின்ஸ் மதிப்பு 20 கோடிகளை தாண்டியது. ஆனால் அப்போதும் விடாத பெங்களூரு 23.50 கோடி தான் கையில் இருக்கிறது என்பதை மறந்து 20.25 கோடிக்கு முட்டாள்தனமாக ஏலம் கேட்டது நேரலையில் பார்த்த ரசிகர்களை சிரிக்க வைத்தது.

இதையும் படிங்க: வாழ்த்த வந்தது குத்தமா? வன்மத்துடன் ஹைதெராபாத் செய்த மட்டமான வேலையால்.. டேவிட் வார்னர் ஏமாற்றம்

இறுதியில் ஹைதராபாத் மீண்டும் 20.50 கோடிக்கு கேட்டதால் மேற்கொண்டு தங்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் வேறு வழியின்றி பெங்களூரு கைகட்டிக் கொண்டது. அந்த வகையில் இந்த ஏலத்தில் சற்று குறைந்த தொகை செல்ல வேண்டிய கமின்ஸை ஹைதராபாத் அதிக தொகை கொடுத்து வாங்கும் அளவுக்கு ரேட்டை ஏற்றி விட்ட பெங்களூரு உள்குத்துடன் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement