ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை பிளேஆப் சுற்றுக்கு சென்ற அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 12 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியானது 10 முறையும், ஆர்.சி.பி அணியானது 9 முறையும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக முதலிடத்தில் இருக்கின்றனர்.
சி.எஸ்.கே அணியை பின்னுக்கு தள்ளி ஆர்.சி.பி புதிய சாதனை :
ஆனால் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்ற பெங்களூரு அணி இதுவரை 17 ஆண்டுகளில் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்றாமல் இருந்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையடி வரும் பெங்களூரு அணியானது 2009-ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ், 2011-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஆனாலும் இதுவரை ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் அந்த அணியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக துவங்கி மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த அணி இம்முறை கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 17 ஆண்டு காலமாக ஒரு கோப்பையை கூட கைப்பற்றவில்லை என்றாலும் ஆர்.சி.பி அணியின் மீதுள்ள அன்பை எப்போதும் ரசிகர்கள் வெளிக்காட்ட தவறியதில்லை.
குறிப்பாக இந்த ஆண்டும் கணிசமான அளவு ஆர்சிபி ரசிகர்கள் அந்த அணிக்கு நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர். அதோடு சமூக வலைதளமும் மூலமாகவும் ஆர்சிபி அணிக்கும் ஆதரவாக நின்று புகழ்பாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆர்.சி.பி அணியின் ரசிகர்களால் சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி ஆர்.சி.பி அணி ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி இப்படி ஆடுறத பாக்க கஷ்டமா இருக்கு.. குறிப்பா இந்த வீக்னஸ் ரொம்ப மோசம் – அம்பத்தி ராயுடு கருத்து
இதுவரை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின் தொடரும் ஐபிஎல் அணியாக சிஎஸ்கே (1.77 மில்லியன் பாலோவர்ஸ்) முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளியுள்ள ஆர்சிபி அணி (1.78 மில்லியன் பாலோவர்ஸ்) முதலிடம் பிடித்து இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை கொண்ட ஐபிஎல் அணியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



