சி.எஸ்.கே அணி இப்படி ஆடுறத பாக்க கஷ்டமா இருக்கு.. குறிப்பா இந்த வீக்னஸ் ரொம்ப மோசம் – அம்பத்தி ராயுடு கருத்து

Rayudu and CSK
- Advertisement -

இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சி.எஸ்.கே அணியானது தங்களது முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது. ஆனால் அதற்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. சிஎஸ்கே அணி சந்தித்த அந்த தோல்வி பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சி.எஸ்.கே அணியை நினைத்தால் வேதனையாக உள்ளது : அம்பத்தி ராயுடு

அதனை தொடர்ந்து நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்திருந்தது. இப்படி சென்னை அணியின் அடுத்தடுத்த இரண்டு தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்ததோடு பெரும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் சென்னை அணியால் பெரிய இலக்கை சேசிங் செய்ய முடியவில்லை என்பது அப்பட்டமாக இந்த போட்டியில் தெரிந்தது. அதுமட்டும் இன்றி கடந்த இரண்டு போட்டிகளாகவே சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மோசமான பீல்டிங் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சரி சென்னை அணி பீல்டிங்கில் மிகப்பெரிய சொதப்பலை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் சென்னை அணி இப்படி மோசமாக பீல்டிங் செய்வதை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் தற்போதைய சென்னை அணியின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளதாகவும் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தது. ஆனால் சிஎஸ்கே அணி பீல்டிங்கில் பெரியளவில் சொதப்பியது. குறிப்பாக ஆட்டத்தை மாற்றும் முக்கிய நேரங்களில் தவறுகளை செய்த சென்னை அணி எதிரணிக்கு வாய்ப்புகளையும் வழங்கியது. முக்கியமான நேரத்தில் பந்துகளை சரியாக பிடிக்கவில்லை என்றும் தோன்றியது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியின் மூலம் நடப்பு ஆண்டின் முதல் நபராக ஜோப்ரா ஆர்ச்சர் – நிகழ்த்திய சாதனை

அதேவேளையில் ராஜஸ்தான் அணி ஷிவம் துபே கொடுத்த கடினமான கேட்ச்சை பிடித்தது அந்த அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முன்பு எப்போதும் சிஎஸ்கே அணி இப்படி ஒரு மோசமாக பீல்டிங் செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் பீல்டிங்கை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement