சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியின் மூலம் நடப்பு ஆண்டின் முதல் நபராக ஜோப்ரா ஆர்ச்சர் – நிகழ்த்திய சாதனை

Archer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11-ஆவது லீக் போட்டியானது நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதல் நபராக ஜோப்ரா ஆர்ச்சர் படைத்த சாதனை :

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ராணா 81 ரன்களையும், ரியான் பராக் 37 ரன்களையும் குவித்தனர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த பந்துவீச்சின் மூலம் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல் நபராக ஒரு முக்கிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : ரவிச்சந்திரன் அஷ்வினை பின்னுக்கு தள்ளி வினோதமான சாதனையை நிகழ்த்திய – விஜய் ஷங்கர்

இந்த போட்டியின் முதல் ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் ரச்சின் ரவீந்திர விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி அந்த ஓவரின் மீதமுள்ள ஐந்து பந்துகளையும் டாட் பாலாக வீசி நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் மெய்டன் ஓவரை வீசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement