26/3 டூ 165/4.. கிங் கோலியுடன் சேர்ந்து டெல்லியை சாய்த்த பாண்டியா.. ஆர்சிபி யாருமே செய்யாத சரித்திர சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி டெல்லியில் 46வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் டெல்லிக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் போராடி 162/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 28, கேஎல் ராகுல் 41, ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்தார்கள்.

பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3, ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நாயகன் விராட் கோலி நிதானம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் அவுட்டானதால் 26/3 என ஆரம்பத்திலேயே பெங்களூரு திணறியது.

- Advertisement -

பெங்களூரு அசத்தல்:

அப்போது வந்த க்ருனால் பாண்டியா மிகவும் மெதுவாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நங்கூரமாக விளையாடி பெங்களூரு அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அந்த வகையில் 17 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.

அதில் விராட் கோலி அரை சதத்தை அடித்து 51 (47) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாடிய க்ருனால் பாண்டியா ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 73* (47) ரன்கள் குவித்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக 19* (5) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

சரித்திர வெற்றி:

அதனால் 18.3 ஓவரில் 165/4 ரன்களை எடுத்த பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதையும் சேர்த்து 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அதை விட இந்த வருடம் கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய அணிகளை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு சாய்த்தது.

இதையும் படிங்க: எங்கள கேள்வி கேட்காம அவங்கள பாராட்டுங்க.. மும்பையிடம் லக்னோ தோற்ற காரணம் பற்றி பண்ட் பேட்டி

அப்படியே ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளையும் அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு வீழ்த்தியது. இதன் வாயிலாக “ஒரு ஐபிஎல் தொடரில் வெளியூர் மண்ணில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற முதல் அணி” என்ற வரலாறு காணாத தனித்துவமான சரித்திர சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. அதனால் இந்த வருடம் கோப்பை தங்களுக்கே என்று பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். டெல்லிக்கு கேப்டன் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement