RR vs CSK : தோனியுடன் பேட்டிங் செய்யும்போது எப்போதும் இதையே நினைப்பேன் – ராயுடு பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின

Rayudu
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Rayudu

போட்டி முடிந்து பேசிய ராயுடு கூறுகையில் : இந்த போட்டி உண்மையில் கடினமாகவே இருந்தது. இந்த மைதானம் ஸ்லோவாக இருப்பதால் ரன்களை குவிக்க சற்று கடினமாக இருந்தது. நானும் தோனியும் களத்தில் இருந்தபோது நிதானமாக ரன்களை குவித்து வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.

தோனியுடன் களத்தில் எப்போது ஆடும்போதும் எனக்குள் ஒரு உத்வேகம் இருக்கும். எவ்வளவு பெரிய இலக்கு என்றாலும் நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கை மனதில் இருக்கும். தோனி போட்டியின் நடுவே கொடுக்கும் அறிவுரை எனக்கு மிகப்பெரிய அளவில் உதவும். அவர் எதிர்முனையில் இருக்கும் போது எனக்கு தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாட மிகவும் பிடிக்கும் என்று ராயுடு கூறினார்.

Advertisement