அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக ஜடேஜா ஆடுவாரா? மாட்டாரா? – நிர்வாகம் தரப்பில் வெளியான தகவல்

Jadeja
- Advertisement -

சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பல ஆண்டு காலமாகவே இருந்துவந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த ஆண்டு ஒரு சோதனை காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த இந்த நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். இப்படி ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதல் 8 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது.

CSK Ms DHoni

- Advertisement -

இதன் காரணமாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு முற்றிலும் மங்கிய வேளையில் ஜடேஜா தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனிப்பட்ட பார்மிலும் இறக்கத்தை சந்தித்த ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த போட்டியிலேயே பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜடேஜாவுக்கு இடம் கிடைக்காமல் போக காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக ஜடேஜா அறிவித்தார். மேலும் சென்னை அணி நிர்வாகமும் ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து ஜடேஜா மற்றும் நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டதால் இனி ஜடேஜா சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்றும் சில தகவல்கள் வெளியாகின.

Jadeja

இதனால் ஜடேஜா அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் நிர்வாகம் சார்பில் வெளியான தகவலின்படி அடுத்த ஆண்டு நிச்சயம் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுவார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சென்னை அணியின் தலைமை நிர்வாகியான காசி விஸ்வநாதன் இதுகுறித்து கூறுகையில் : சென்னை அணியின் வருங்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் ஜடேஜா முக்கிய பங்கினை வகிப்பார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு காயம் காரணமாகவே அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து எந்த பிரச்சனை காரணமாகவும் வெளியேறவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தோனி பண்றதெல்லாம் நியாயமே இல்ல. இது வெறும் கண்துடைப்பா – சென்னை ரசிகர்கள் கொந்தளிப்பு

இதன் காரணமாக நிச்சயம் இனிவரும் சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா பங்கேற்றார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement