தோனி பண்றதெல்லாம் நியாயமே இல்ல. இது வெறும் கண்துடைப்பா – சென்னை ரசிகர்கள் கொந்தளிப்பு

Dhoni
- Advertisement -

பொதுவாகவே சென்னை அணியின் நிர்வாகம் தமிழக வீரர்களை அணியில் எடுப்பதற்கும் ஐபிஎல் போட்டிகளின்போது விளையாட வைப்பதற்கும் தயக்கம் காட்டி வருவதால் எப்போதுமே சென்னை அணியின் மீது தமிழ் நாட்டு வீரர்களை விளையாட வைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பினை சென்னை அணி தவற விட்டதால் இனி வரும் இரண்டு போட்டிகளிலாவது தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Jagadeesan

- Advertisement -

ஆனால் இன்று நடைபெற்று முடிந்த குஜராத் அணிக்கு எதிரான சென்னை அணியின் 13-வது லீக் ஆட்டத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் மட்டும் கண்துடைப்புக்காக அணியில் சேர்க்கப்பட்டார். அவரை தவிர்த்து கடந்த பல சீசன்களாகவே சென்னை அணியுடன் இணைந்திருக்கும் துவக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த்க்கு இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அதே வேளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று வீரராக இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட 19 வயதான பதிரானாவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மும்பையைச் சேர்ந்த 22 வயதான பிரசாந்த் சோலங்கிக்கும் இன்று வாய்ப்பு கிடைத்தது.

Natarajan Washingtan Sundar Hari Nishanth

இப்படி இலங்கையைச் சேர்ந்த வீரருக்கும், மும்பையைச் சேர்ந்த வீரருக்கும் வாய்ப்பு கொடுக்கும் போது ஏன் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாக கேள்வி எழுப்புகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சென்னை அணியில் இடம் பிடித்து இருந்தாலும் அவர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

இன்றைய போட்டியில் கூட துவக்க வீரரான ஜெகதீசனை கட்டாயப்படுத்தி மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் எப்போதும் சென்னை அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது அணித்தேர்வு குறித்து தங்களது கண்டனங்களை கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை எளிதாக சுருட்டி வீசிய குஜராத் அணி. மாஸ் வெற்றி – நடந்தது என்ன ?

அதேவேளையில் சென்னை அணியை தவிர்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை, குஜராத் போன்ற அணிகளில் அதிகளவு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதை தமிழக ரசிகர்கள் சுட்டி காட்டி சி.எஸ்.கே அணியை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement