சி.எஸ்.கே அணியை எளிதாக சுருட்டி வீசிய குஜராத் அணி. மாஸ் வெற்றி – நடந்தது என்ன ?

Wriddhiman Saha 67
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 15-ஆம் தேதி நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் ஏற்கனவே தொடர் வெற்றிகளால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னையை எதிர்கொண்டது. குறிப்பாக பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன நிலையில் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி தமிழகத்தின் நாராயன் ஜெகதீசன், விஸ்ணு சோலங்கி, மதீஸா பதிரனா ஆகிய 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார்.

Ruturaj gaikwad 73

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் டேவோன் கான்வே 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மொயின் அலியுடன் கைகோர்த்த ருதுராஜ் கைக்வாட் 2-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்கப் முயற்சித்தார். ஆனால் 2 சிக்சருடன் மொயின் அலி 21 (17) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

மெதுவான பேட்டிங்:
இருப்பினும் ஜெகதீசன் – ருதுராஜ் ஆகிய இருவருமே மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் ருதுராஜ் 53 (49) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சிவம் துபே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலைமையில் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனியும் 7 (10) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் மெதுவாக பேட்டிங் செய்த ஜெகதீசன் 39* (33) ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாத போதிலும் 20 ஓவர்களில் சென்னை 133/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Rashid Khan Ruturaj

அதை தொடர்ந்து 134 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் ரித்திமான் சாஹா – சுப்மன் கில் ஆகியோர் 59 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் கில் 18 (17) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த மேத்யூ வேட் தனது பங்கிற்கு 20 (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 (6) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

- Advertisement -

குஜராத் மாஸ் வெற்றி:
இருப்பினும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிதிமான் சஹா அரைசதம் கடந்தும் அதிரடியை கைவிடாமல் கடைசி வரை நின்று 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (57) ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் டேவிட் மில்லர் 15* (20) ரன்கள் எடுக்க 19.1 ஓவரில் 137/3 ரன்களை எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய இலங்கையின் மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை வலுவாக பிடித்தது.

Shubman Gill Wriddhiam Saha

மறுபுறம் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்த சென்னை பங்கேற்ற 13 போட்டிகளில் 9-வது பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்று தைரியமாக பேட்டிங் செய்த சென்னை அதற்கு ஏற்றவாறு ரன்கள் குவிக்கவில்லை.

குறிப்பாக விக்கெட்டுகள் கையிலிருந்த போதும் கடைசி நேரத்தில் ருதுராஜ் – ஜெகதீசன் ஆகியோர் அதிரடி காட்டாமல் பொறுமையாக பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அதிலும் ரன் மழை பொழிய வேண்டிய கடைசி 5 ஓவர்களில் ஜெகதீசன், தோனி உட்பட எந்த சென்னை பேட்ஸ்மேனும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அந்த அளவுக்கு பந்துவீச்சில் மாஸ் காட்டிய குஜராத் இந்த எளிமையான வெற்றிக்கு ஆரம்பத்திலேயே வித்திட்டது.

CSK Matheesa Pathirana

அத்துடன் இவ்வளவு குறைவான ரன்களை முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், மதீஸா பதிரனா, விஷ்ணு சோலங்கி போன்ற இளம் சென்னை பவுலர்களால் கட்டுப்படுத்தி வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. மேலும் வரலாற்றில் சென்னை 1 முறை கூட புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததில்லை.இந்த நிலைமையில் இந்த தோல்வியால் தற்போது 10-வது இடத்தில் இருக்கும் மும்பை தனது அடுத்த 2 போட்டிகளில் வென்றால் சென்னை கடைசி இடத்தை பிடித்து மீண்டும் ஒரு அவமானத்தை சந்திப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.

Advertisement